வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால 'ரோடு' போட முடியாதே!
###########################
" கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா.. வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா? "
###########################
பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா..கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா?
###########################
"ஆசிரியர் : என்கிட்டே நல்லா படிச்சவன் டாக்டராயிருக்கான்,சுமாரா படிச்சவன் பஸ்ல கண்டக்டராயிருக்கான்,இதுலயிருந்து என்னத்தெரியுது?
மாணவன் : ரெண்டு பேருமே, டிக்கெட் கொடுக்கிற வேலையிலயிருக்காங்கன்னு தெரியுது."
###########################
" டீச்சர்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ…?
மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..
டீச்சர்:- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்?
மாணவன்:- கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா? "
###########################
"அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில்………
மகன்:- அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், சொல்லலாமா?
அப்பா:- சாப்பிடும் போது பேச கூடாது, அது நல்லது இல்லைன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்…பேசாம சாப்பிடு..அப்புறம் பேசலாம்..
சாப்பிட்டு முடித்த பிறகு…
அப்பா:- என்னமோ சொல்லலும்னு சொன்னியே இப்போ சொல்லுடா..
மகன்:- வேற ஒண்ணுமில்லப்பா..நீங்க சாப்பிட்ட சாம்பார்ல ஒரு பல்லி செத்து கிடந்தது. அத தான் சொல்ல வந்தேன்…
அப்பா:- ??????????!!!!
கருத்து:- பசங்க பேச்சையும் கொஞ்சம் கேளுங்க பெருசுங்களா.. "
###########################
"தமிழக அமைச்சர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா அதிபர் வீட்டை பார்வையிட்டவர் அவரிடம் கேட்டார், ‘இவ்ளோ பெரிய வீட்டை எப்படி சார் கட்டுனீங்க’. அதற்க்கு அமெரிக்கா அதிபர் சொன்னார், ‘அதோ அங்கே தெரியுதுல்ல மேம்பாலம், அதுல வந்த கமிஷன வச்சி தான் இந்த பெரிய வீட்டை கட்டினேன்..’.
அதன் பின் அமெரிக்கா அதிபர் தமிழக வந்தபோது, அதே அமைச்சரின் வீட்டை பார்த்து மிரண்டு போனார். அமைச்சரிடம் கேட்டார், ‘என் வீட்டை விட நீங்க பெருசா வீடு கட்டி இருக்கீங்களே, நீங்க எப்படி கட்டுனீங்க?’. அதுக்கு அமைச்சர், ‘அத்தோ தெரியுதுல்ல மேம்பாலம்..’ என்று கை காமித்தார். அதிபர் பார்த்துவிட்டு, ‘எங்கே..எந்த மேம்பாலமும் என் கண்ணுக்கு தட்டுபடலையே..எங்க இருக்கு மேம்பாலம்..’. என்று கேட்டார். அதுக்கு அமைச்சர், ‘ஆங்..அங்க மேம்பாலம் கட்ட வேண்டிய காசுல தான் நான் இந்த வீட்டை கட்டி இருக்கேன்..’ என்றார். அமெரிக்கா அதிபர் ஆடி போனார். "
###########################
" மணி உன் போன் நம்பர் சொல்லு
கோபு : 42020259
மணி சரியா கேக்கலை திருப்பி சொல்லேன்.
கோபு : 95202024
மணி ?/? "
###########################
"டீச்சர்: உன்னோட பேர் என்னமா?
பெண்: சுந்தரி
டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?
பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க..
டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..
எழுதியவர் :சோனி ஜோசப் "
###########################
" வாரப் பத்திரிகைக்கு தட்டச்சு செய்கிறவர்கிட்டே குற்றப்
பத்திரிகையை ‘டைப்’ பண்ணக் குடுத்தது தப்பாப்
போச்சா…ஏன்?
‘இவை யாவும் கற்பனையே…யாரையும் எவரையும்
குறிப்பிடுவது அல்ல’ன்னு கடைசியில ஒரு ‘லைன்’
அடிச்சுத் தொலைச்சிருக்கார்..!
>ஜெயாப்ரியன் "
###########################
"ஒவ்வொரு தடவை பூட்டை உடைச்சுத் திருடும்போதும்,
மனசு கிடந்து அடிச்சுக்கும்..!
இது தப்புன்னா..?
இவ்வளவு நல்ல பூட்டையெல்லாம் வீணா
உடைக்கிறோமேன்னு..! "
###########################
" தலைவரோட பேத்தி ஸ்க்ரூ ட்ரைவரை தூக்கிக்கிட்டு
ஓடினதை செய்தியாப் போட்டதுக்காகவா இவ்வளவு
கோபப்படறார்..?
ஊஹூம்…அதுக்குத் தலைப்பு ‘தலைவரின் பேத்தி
டிரைவருடன் ஓட்டம்’னு போட்டுட்டாங்களாம்…அதான்..! "
###########################
" சே…என் பையன் செஞ்ச காரியத்தால வெளியே தலை காட்ட முடியலை..!
அப்படி என்ன செஞ்சுட்டான் சார்..?
என்னோட ‘விக்’ கை குப்பையிலே போட்டுட்டான்..! "
###########################
" கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியகர்ளிடம் கத்தினார்.
‘நான்தான் இங்கு முதலாளி. நீங்கள் ஒன்றுமே இல்லை.
வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’
ஊழியர்கள் அமைதியாகப் பதில் அளித்தார்கள்: ‘… பூஜ்யம்!’
‘அப்படியானால் நான் யார்?’ முதலாளியின் அடுத்த கேள்வி.
ஊழியர்கள் மீண்டும் அமைதியாக: ‘பூஜ்யத்தின் முதலாளி’!
நீதி உங்களுக்குக் கீழ் இருப்பவர்களை மதிப்பானவர்களாக நியமித்து, மதிப்பானவர்கள் மதிப்பவராக உங்களை நீங்கள் தகுதிப் படுத்திக்கொள்ளுங்கள்! "
###########################
"டைப்பிஸ்ட் வேலைக்கு வந்திருக்கே… எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா..?
நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..! "
###########################
"ரகு : வயித்தைக் கலக்குதுடா..!
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?
-க.சு.கவின்சூரியா, "
###########################
"பாம்பாட்டி பாம்பைக் காட்டி பொழப்பு நடத்றான்.
குரங்காட்டி வித்தை காட்டி பொழப்பு நடத்றான்.
நீ மட்டும் எப்படி பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே? "
###########################
ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது, தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது, ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது?
###########################
புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்.. ஆனா கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா?
###########################
ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு, வெளியில வர பெயிலு... எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு'
###########################
ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க ... ஆனா பஸ்ல காசுக் கொடுக்கலன்னா... பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
###########################
"விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ...
விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை? "
###########################
அப்பா அடிச்சா வலிக்கும், அம்மா அடிச்சா வலிக்கும், ஆனா .. சைட் அடிச்சா வலிக்காது
###########################
அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?
###########################
மண்டையில போடுறது DYE... மண்டைய போட்டா DIE...!!
###########################
தண்ணியில கப்பல் போனா ஜாலி .... கப்பலுக்குள்ள தண்ணி போனா நீ காலி!!!
###########################
"இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...
அப்படியா?..
ஆமாம்! இப்பப் பாரேன்...
இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்... "
###########################
" ரசம் vs விஷம் :ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?... என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான், அதான். "
###########################
" பதற்றம் VS நடுக்கம் :காதலி மாசமாய் இருப்பது தெரிய வரும்போது வருவது பதற்றம். காதலி மாசமாய் இருப்பது மனைவிக்கு தெரிய வரும்போது வருவது நடுக ... "
###########################
" கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேன். அப்புறம்?... ஒரு வழியா கல்யாணம் ஆயிடிச்சி... இப்ப?.... இப்ப..நல்ல சாப்பாடு கிடைக் ... "
###########################
ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?.... வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!
###########################
வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.
###########################
"நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
பெண் அவ்வளவு அழகா?
இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா.. "
###########################
என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் ..... பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...
###########################
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள். நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!
###########################
யோவ்...டிரைவர் வண்டிய மெதுவா ஒட்டுயா, பயமா இருக்கு..... உனக்காக மெதுவா போக முடியாது, பயமா இருந்தா என்னை மாதிரி கண்ணை மூடிக்கோ.
###########################
" கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ... அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது? "
###########################
"என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...!!
உனக்குத்தான் தெரியுமே...
நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு... "
###########################
"இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க..
.யாருங்க அந்த மகாலட்சுமி ?....
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...! "
###########################
"என்னங்க... உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...?
(கணவன்): ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள். "
###########################
"உன் போட்டோவா இது...
எனக்கே சந்தேகமா இருக்கு...
(மனைவி): என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ... "
###########################
"வீழ்வதில் வெட்கப் படாதே! வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்!
...... இப்படி எல்லாம் சொல்லி வீழ்தவன் மனச நேகடிக்காதிங்க!! "
###########################
PART3: "சினிமா பாட்டுதான்" "சரி எந்த படத்துல இருந்து?" "சினிமா படத்துல இருந்துதான்" "அய்யோ!" THE END!!
###########################
PART2: "வணக்கம் எத்தனை தடவை சொல்றது?" "அதில்லைங்க" "எது இல்லை?" "சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?" "போன்ல இருந்துதான் பேசறேன்" "சரி என்ன ...
###########################
" PART1: வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்..... ""ஹலோ வணக்கம்!"" ""வணக்கம்! சொல்லுங்க..."" ""வணக்கம்தான் சொல்லிட்டேனே”!!! "
###########################
உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்...உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்
###########################
என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய். வீட்டில் இன்னொரு ஜோடியும் இருக்கிறது
###########################
" கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?.... இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான். "
###########################
இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க கேட்டீங்களா? ... நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...
###########################
இதுவரை எத்தனை இலையான் அடித்தாய்?..மூன்று, இரண்டு ஆண். ஒன்று பெண்.ஆண், பெண் என்று எப்படிக் கண்டு பிடித்தாய்? பியர் போத்தலின் மேல் இரண்டு ...
###########################
கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன், உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.
###########################
நாம ஓடீப்போயிடலாமா ... செருப்பு பிஞ்சுடும் ... பரவாயில்லை போகும்போது தச்சுக்கலாம்
###########################
" ""ஒன்றே குலம் ஒருவனே தேவன்"" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு? அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு. "
###########################
கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு? அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.
###########################
காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது. (செக் பண்ணிவிட்டு டாக்டர்) எனக்கு ஒன்னும் கேட்கலையே? அப்படியா! அப்போ ஏதாவது சிக்னல்ல நின்னிருக்குமோ!
###########################
" மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன். "
###########################
" எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார்...
ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே? ..
ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே! "
###########################
இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... சிள்வர் ஸ்பூன், பிலாஸ்ரிக் ஸ்பூன் எல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்ல டாக்டர்
###########################
" படத்துக்கு ஏன் “வாக்கின் இண்டர்வியூ” ன்னு தலைப்பு வைச்சாங்க? அப்பதான் இளைஞர்கள்லாம் அடிச்சுப் பிடிச்சு ஓடி வருவாங்க என்றுதான் "
###########################
"டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!...
ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ. "
###########################
"இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.
எனக்கு நீச்சல் தெரியாதே. கவலைப்படாதீங்க. குளத்துல தண்ணியே இர ... "
###########################
"வீட்டுக்கு ஒரு குதிரை இலவசம்னு சொல்லிட்டீங்க, கட்டுப்படியாகாது மன்னா!!
வீட்டுக்கு ஒரு குதிரை லட்சியம். ஆனா, ஒரு கழுதை நிச்சயம்னு அறிக்கை ... "
###########################
" மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?....
வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொ ... "
###########################
"மன்னா !
நீங்கள் அப்பா ஆகிவிட்டீர்கள் !
பலே!
பலே! எந்த பெண் அம்மா ஆகியிருகிறாள் ? "
###########################
என்ன ! மன்னா அ.அ.அ. போ. வா ? ஆமா, அம்சவல்லியை அழைத்துக் கொண்டு அந்தபுரம் போய்விட்டார் !.
###########################
"போடா பண்ணி! என்ன வில்லத்தனம்................
ஆகா..........
அவனா நீ! வந்துட்டாண்டா வந்துட்டாண்டாஆஆ!!! "
###########################
" ஹலோ............. டுபாய்யா...?
என்னுடைய பிரதர் மார்க் இருக்காறாரா.....?
ஏய் நீதான் பேசுறையா..... ஹௌ ஆர் யூ ???? "
###########################
எனக்கெல்லாம் ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி !
###########################
" அந்த கட்டதுறைக்கு கட்டம் சரியில .........
நம்மகூட விளையாடுறதே வேலையா போச்சு ........ "
###########################
"தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்....
எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா? "
###########################
யூ பார் மிஸ்டேக்..... மீ தேவா நம்பர்...... மை பேமிலி டோட்டல் டேமேஜ், 'ஐ சீ ஜஸ்ட் பார் ஜட்டி'
###########################
" நெல்லுக்குள் அரிசிபோல, பூவுக்குள் தேன்போல, மண்ணுக்குள் வைரம்போல...
உன் மனசைத் தொட்டு சொல்லு.. உன் மண்டைக்குள் களிமண்தானே....?"
###########################
" ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே?
வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார். "
###########################
"எத்தனபேர்ரு...? ஒருத்தனா...!?! உயிர் இருகனுமா?
போகனுமா? இருந்தும் இல்லாம இருக்கானுமா...? இல்ல...
இல்லாம இருக்கிறமாதிரி இருக்கனுமா...? "
###########################
"இல்ல... றேண்டுமே இல்லாமா....?
டேய்... எறும்புத் தோல உரிக்கிறதுக்கு காண்டாமிருகமா... !?! "
###########################
"பால் வியாபாரம் ஆரம்பிச்சியே எப்படி போகிறது?
மாட்டின் சொந்தகாரன் கண்ல மாட்டாதவரை நல்லாதான் போகுது!! "
###########################
"அந்த அம்பயர் ஏன் ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்?
அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாஙகளாம். "
###########################
"ஏன்டி திருடன இப்படி அடிக்கிற!?! ...
அட இருட்டில நான், நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுட்டன்!!!! "
###########################
"கனவன்: அநாவசியமா! எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை எழுப்பாத! தாங்க மாட்ட!.
மனைவி: பூனைக்குட்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்!. "
###########################
"காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?
காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்."
###########################
"செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது. "
###########################
" ""எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?""
""இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே"" ""எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"" "
###########################
"ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?" "நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..."
###########################
"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?" "அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."
###########################
இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து.... "யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.." "ஏன்..?" "பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"
###########################
" ""பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்"" ""ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு"" "
###########################
"நண்பர்-1: என் பையனுக்கு 'செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு!
நண்பர்-2: ஏன், என்னாச்சு? நண்பர்-1: எந்த நேரமும் அவளையே 'சுத்திச் சுத்தி' வர்றான். "
###########################
"பெண்: டாக்டர், இவர் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார்.
டாக்டர்: நீங்க ஏன் பார்க்கறீங்க? "
###########################
"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?" "ஒன்றும் செய்யக் கூடாது!"
###########################
" ""அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு.. வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."" ""ஏன்?"" ""அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே.......!"" "
###########################
"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?" "சம்பளம் கைக்கு வந்ததும்..." "சம்பளம் எப்போ கைக்கு வரும்?" "கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"
###########################
"போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?" "சத்தம் போடாம வாரும். அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்.."
###########################
"முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?" "டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!"
###########################
"கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?" "ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"
###########################
"உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?" "அதனால உனக்கென்ன?" "நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே"
###########################
"புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?" "தெரியலையே.." "புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்"
###########################
"என்ன.. கல்யாண சீர்ல எல்லாம் பித்தளை பாத்திரமாவே இருக்கு?" "ஹி..ஹி.. மாப்பிள்ளைக்குப் பேரீச்சம்பழம் ரொம்பப் பிடிக்குமாம்.. அதான்..!"
###########################
" ""இந்த சிகரெட் பிடிக்கறதை விட்டுடப் போறேன்."" ""நிஜமாவா?"" ""ஆமாம்.. இதுக்கு மேல பிடிச்ச கைய சுட்டுடும்."" "
###########################
"தினமும் காலையில் வெறும் வயிற்றில் நடங்க.." "யார் வயிற்றின் மீது டாக்டர்..?"
###########################
" ""உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?"" ""கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.."" "
###########################
"என்னது..? நிறைய ஓட்டை இருக்குன்னு உன் கதையை திருப்பி அனுப்பிட்டாங்களா..? கதை பேர் என்ன..?" "சல்லடை..!"
###########################
"எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?" "இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!"
###########################
"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட 'செக்கப்' பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?" "பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
###########################
"காதலன்: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி: அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன்: மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை... காதலி: !!!! "
###########################
"பாத்திரத்துல உள்ள தண்ணியில் கையை நனைக்கச் சொல்றீங்களே ஏன்?" "எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் கையை நனைக்காம அவங்களை அனுப்புறதில்லை.."
###########################
"லோன் செக்ஷனில் வேலை பார்க்கிறவரை மாத்திடணும் சார்.." "ஏன்..?" "எதோ கடனுக்கு வேலை பார்க்கிறார்"
###########################
" ""முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!""
""எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க! "
###########################
"""பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க..
எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.."" ""சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?"" "
###########################
" ""தலைவருக்கு எத்தனை மனைவி?"" ""சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு!"" "
###########################
"மாலா: எங்க தாத்தாவுக்கு தினமும் கேழ்வரகுக்கூழ், கம்பங்கூழ் இருந்தா போதும் வேற எதுவும் தேவையில்லை.
ஹரி: ஓகோ! அப்ப வெறும் 'கூழ்'ட்ரிங்ஸ் தான்னு சொல்லு.... "
###########################
"கலா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா கல்லைப் பொறுக்க முடியாதா?
மாலா: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?"
###########################
"அடிக்கடி திருடிட்டு என் முன்னாடி வந்து நிக்கிறியே, உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே?" "ஒரு நாற்காலி போட்டா, நிக்காம சௌகரியமா உட்கார்ந்துக்கலாம்னுதான் எசமான்!"
###########################
"என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை.." "அப்படி என்ன பண்ணிட்டான்..?" "என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்."
###########################
"""சார்.. நான் போகவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டைமுக்கு வருதா..?""
ஸ்டேஷன் மாஸ்டர்: டைமுக்கு வந்தா என்ன..
வராட்டி என்ன..? நாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லே.. தண்டவாளத்தில வந்தா போதும்..!"" "
###########################
" ""டாக்டர் எனக்கு கூச்சமா இருக்குது."" ""எதுனாலும் டாக்டர்கிட்ட கூச்சப்படாமல் சொல்லுங்க."" ""எனக்கு பல்லு கூச்சமா இருக்கு டாக்டர்."" "
###########################
"கல்யாணத்தில் மொய் எழுத மறந்துட்டு வந்திட்டேன்.." "அப்ப நீ கல்யாண பரபரப்புல 'மொய் மறந்துட்டே'னு சொல்லு."
###########################
"ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூக்கினான். இது என்ன காலம்?
மாணவி: கொசுவே இல்லாத காலம் சார்...! "
###########################
" லதா: எங்க அப்பா பத்து வருஷமா வியாபாரம் பண்றாரு ஆனா சேமிப்பே இல்லை..
கீதா: என்ன வியாபாரம்? லதா: சேமியா வியாபாரம். "
###########################
"""தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா? பிற்போக்கை விரும்பறாரா?
""ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்."" "
###########################
" நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே, இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே...?
நடிகை: அதெல்லாமில்லீங்க... இது 'கரைஞ்சதும்' வேற புது சோப் வாங்கிடுவேன்...! "
###########################
"அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு." "எப்படி சொல்றீங்க?" "வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே."
###########################
" ""ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?""
""சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"" "
###########################
"""என்ன தலைவர் எல்லோரையும் இந்த அடி அடிக்கிறாரு?""
""அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு.."" "
###########################
"""புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது""
""புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?"" ""என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"""
###########################
"""மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?""
""என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு!"" "
###########################
" ""ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னைய மூணு பேர் சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க சார்..."" ""ரெண்டு நாளா கம்ப்ளெயிண்ட் பண்ணாம என்ன பண்ணினே?"" ""அவங்ககிட்ட பணம் கேட்டு அலைஞ்சிட்டிருந்தேன்..."" "
###########################
"செக்கிங் மாஸ்டர்: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
செக்கிங் மாஸ்டர்: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா? செக்கிங் மாஸ்டர்: ......... ???? "
###########################
" ""பரவாயில்லையே.. சைக்கிள்கூட காஸ்ல ஒடுதா..?""
""யோவ் விளையாடாதே! நான் காஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்கறவன்.."" "
###########################
"""நீங்க வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்திருக்கிறதா பேசிக்கறாங்களே..""
""ஐயையோ! அது பச்சைப் பொய், எனக்கு வருமானமே கிடையாது..
சொத்து மட்டும்தான் சேர்க்கறேன்"" "
###########################
"""ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்கறியே நியாயமா?""
""தப்பா நினைச்சுக்காதீங்க வெளுத்ததெல்லாம் பால்-னு நினைக்கறவன் நான்"" "
###########################
"""நீங்கதானே தமிழ்செல்வன்..?"" ""ஆமாங்க..?""
""உங்க பேர்லே கணக்கு இருக்கா..?""
""கணக்கு- இல்லைங்க தமிழ்-தான் இருக்கு?"""
###########################
" ""பாலிடெக்னிக் பிரின்ஸிபாலை போலீஸ் பிடிச்சிக்கிட்டு போறாங்களே ஏன்?""
""டிப்ளமா இன் திருட்டு வி.சி.டி. டெக்னாலஜினு புதுசா கோர்ஸ் ஆரம்பிச்சாராம்.."" "
###########################
" ""டாக்டருக்கு தன்னம்பிக்கை குறைவு போல""
""எதை வச்சி சொல்ற?""
""தினசரி பத்து பக்கத்துக்கு ஆபரேஷன் சக்ஸஸ்னு எழுதிக்கிட்டு வர்றாரே.."" "
###########################
"""பெண் வீட்டுக்காரங்க ஏன் இன்னும் கல்யாணத்தைத் தள்ளி வச்சிக்கிட்டே இருக்காங்க?""
""ஆயிரம் பொய் சொல்ல இன்னும் முன்னூறு பொய் பாக்கியிருக்காம்.. அதனாலதான்..!"""
###########################
"""அவன் வித்தியாசமான பக்தன்னு எப்படிச் சொல்றே?""
""திருப்பதிக்கு மொட்டைக் கடுதாசி போடுறேன்னு வேண்டியிருக்கான்"" "
###########################
" ""கேரட் சாப்பிட்டா கண் நல்லா தெரியும்னு டாக்டர் சொன்னாரு.. அதான்"" ""நீங்க சாப்பிடறது கேரட் இல்லை.. முள்ளங்கி..!"" "
###########################
"எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கார் டாக்டர்.." "இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..?" "பவர் கட் ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காரே.."
###########################
"""அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படிச் சொல்றே..?""
""விதி விளையாடிருச்சினு சொன்னா, ஸ்கோர் என்னனு கேட்கறார்?"" "
###########################
"நடுவர்: என்ன சார் உங்களோட பெரிய ரோதனையாப் போச்சு, ஒரு பந்துல 2 பேருக்கு அவுட் கொடுக்க முடியாது சார் ரூல்ஸ் இடம் கொடுக்காது!
கேப்டன்: இந்தப் பந்துல 2 பேர் அவுட் ஆவாங்கன்னு நான் ஏகப்பட்ட பணம் வாங்கிட்டேனே சார் இப்ப என்ன செய்றது....? "
###########################
"""இந்த ஆள் டி.வி. மெக்கானிக்கா.. இல்லே சைக்கிள் மெக்கானிக்கா..?""
""ஏன் கேக்கறீங்க..?""
""டி.வி-யில பிக்சர்டியூப் சரியில்லேங்கறேன்.. பங்க்ச்சர் ஒட்டிடலாம்ங்கறான்"" "
###########################
"""எங்கப்பா யார் எது சொன்னாலும் நம்பிடுவார்..""
""சரி.. அதுக்கும் சுவர்ல ஜிமிக்கியா மாட்டி வெச்சிருக்காரே.. அதுக்கும் என்ன சம்பந்தம்..?""
""சுவருக்கும் காது உண்டுனு யாரோ அவர்கிட்ட சொல்லிட்டாங்க அதான்!"" "
###########################
"""உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார்..""
""சீ.. சீ.. அவன் பிடிக்கறதுக்கு ரொம்ப நாள் முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.."" "
###########################
"ஏம்பா திடீர்னு ரேடியோல சவுண்டை கம்மி பண்ணிட்டே?" "சவுண்டை கம்மி பண்ணலைங்க.. நான் தான் முடிவெட்டும்போது தெரியாம உங்க காதை கட் பண்ணிட்டேன்!"
###########################
"கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஒரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்......! "
###########################
"நோயாளி: டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க? "
###########################
"போலீஸ்: இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன்: அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன். "
###########################
"""உங்கப் படத்தைப் பத்தி இணையத்திலே நல்லா அடிச்சு துவைச்சுட்டாங்களே...""
""அதனாலதான் படத்தில கலர் அங்கங்க திட்டுத் திட்டா தெரியுதா?"" "
###########################
"விசாரணை அதிகாரி: நோ-பால் போட காசு வாங்கினீங்க சரி!
ஆனா ஒவ்வொரு பந்துக்குப் பிறகும் அம்பயரைப் பார்த்து ஏன் அழகு காண்பிச்சீங்க
வீரர்: அம்பயர் சூதாட்டக்காரரோட மாமனாராம், அதனால அழகு காண்பிச்சாத்தான் காசு தருவேன்னு சொன்னார் அதான். "
###########################
"""ஆக்சிஜன்லே இருந்த கோமா பேஷண்ட் எப்படிக் பொழச்சிக்கிட்டாரு?""
ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதிலா அடைக்கிற ஹைட்ரஜன் சிலிண்டர் தவறுதலா சப்ளை ஆகியிருக்கு டாக்டர்!"" "
###########################
"""உங்க பையனுக்குத் தலை முழுவதும் காயமா இருக்கே ஏன்?""
""கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டுனு சொன்னேன். அதை அவன் தப்பாப் புரிஞ்சுக்கிட்டான்..."" "
###########################
"அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படிச் சொல்றே....?" "விதி விளையாடிருச்சினு சொன்னா, ஸ்கோர் என்னனு கேட்கறார்..."
###########################
"""ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?""
""கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!"""
###########################
" ""பொறுப்பான ஆசிரியர் பதவியில இருக்கற நீங்க, காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?""
""எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு 'கிளாஸ்'போடுங்கனு டாக்டர் தான் சார் அறிவுறுத்தினார்."" "
###########################
" ""கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது."" ""அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற... ""சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"" "
###########################
"முதலாளி தன் மேலாளரிடம்...
ஏம்பா..
அந்த மொக்கையைப் பார்த்தாலே ஏதோ ரவுடி போல இருக்கு..
முகத்துல அரிவாள் வெட்டு தழும்பு எல்லாம் இருக்கு..
அவனைப் போய் கேஷியரா போட்டு இருக்கியே..
பணத்தைத் தூக்கிட்டு ஓடிட்டான்னா..?
அந்தத் தழும்பை அடையாளமா போலீசுக்கு சொல்லலாம் சார்..! "
###########################
மானேஜர்: "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!" கிளார்க்: "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"
###########################
"ஏய்யா.. கபாலியை சட்டையப் புடிச்சு இழுத்துட்டு வரச் சொன்னேனே..
எங்கே? ""அவன் சட்டையே போடலீங்க சார்!"" "
###########################
"""வால் போஸ்டர் பார்த்தீங்களா! கோவையில் முக்கிய நபர் கைதுன்னு போட்டிருக்கான்.""
""ஏன் சேலத்துல முக்கினா கைது பண்ண மாட்டாங்களா?"" "
###########################
"திருடனிடம் வீட்டுக்காரர்: உனக்கு எவ்வளவு வயசிருக்கும்? ""ஏன் கேட்கிறே?""
""நான் வயசுக்கு மரியாதை தருபவன். நீங்க போன பிறகு 'திருடன்'ன்னு கத்தறதா, 'திருடர்'ன்னு கத்தறதான்னு சந்தேகம். "
###########################
"""கூட்ட நெரிசல் தாங்காமல் ஓடற பஸ்ஸிலிருந்து கீழே விழுந்துட்டாராம்..!""
""அடப்பாவமே... யாரு சார் அது? படிக்கட்டில் நின்னுட்டிருந்தவரா...""
""இல்லை. பஸ்ஸை ஓட்டிக்கிட்டுப் போனவராம்...!"" "
###########################
"ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க..""
""ஏன்..?"" ""பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."" "
12 "ஜக்கு: ஏண்டா மக்கு ஒரு கால் பிளாட்பாரத்திலயும், ஒரு கால் ரோடுலையும் வச்சு நடக்கற?
மக்கு: நல்லவேளை ஞாபகப் படுத்தினடா ஜக்கு, நான் கூட எங்க நொண்டியாயிட்டேனோன்னு பயந்தே போயிட்டேன்."
Post a Comment
Post a Comment