உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!





###########################




இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா? என்னது இல்லையா? அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"





###########################




Cycle ஓட்டினா அது Cyclining அப்படின்னா...Train ஓட்டினா அது training-ஆ?





###########################




ஒடுர எலியின் வாலை புடிச்சா நீ கிங்கு .... ஆனா.... ஒடுர புலியின் வாலை புடிச்சா உனக்கு சங்கு!!





###########################




இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....ஆனா.... இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா





###########################




என்னதான் விடிய விடிய டிவி ஓடினாலும் ..... ஒரு இன்ச் கூட நகராது





###########################




நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?





###########################




நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே. நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும் நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே?





###########################




வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால 'ரோடு' போட முடியாதே!





###########################




கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா.. வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?





###########################




பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா..கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா?





###########################




பாம்பாட்டி பாம்பைக் காட்டி பொழப்பு நடத்றான். குரங்காட்டி வித்தை காட்டி பொழப்பு நடத்றான். நீ மட்டும் எப்படி பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?





###########################




ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது, தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது, ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது?





###########################




புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்.. ஆனா கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா?





###########################




ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு, வெளியில வர பெயிலு... எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு'





###########################




ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க ... ஆனா பஸ்ல காசுக் கொடுக்கலன்னா... பஸ் ஓட்டச்சொல்வாங்களா?





###########################




விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?





###########################




அப்பா அடிச்சா வலிக்கும், அம்மா அடிச்சா வலிக்கும், ஆனா .. சைட் அடிச்சா வலிக்காது





###########################




அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?





###########################




மண்டையில போடுறது DYE... மண்டைய போட்டா DIE...!!





###########################




தண்ணியில கப்பல் போனா ஜாலி .... கப்பலுக்குள்ள தண்ணி போனா நீ காலி!!!





###########################




இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்... அப்படியா?.. ஆமாம்! இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...





###########################




ரசம் vs விஷம் :ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?... என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான், அதான்





###########################




பதற்றம் VS நடுக்கம் :காதலி மாசமாய் இருப்பது தெரிய வரும்போது வருவது பதற்றம். காதலி மாசமாய் இருப்பது மனைவிக்கு தெரிய வரும்போது வருவது நடுக ...





###########################




கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேன். அப்புறம்?... ஒரு வழியா கல்யாணம் ஆயிடிச்சி... இப்ப?.... இப்ப..நல்ல சாப்பாடு கிடைக் ...





###########################




ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?.... வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!





###########################




வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.





###########################




நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா? இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..





###########################




என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் ..... பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...





###########################




நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள். நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!





###########################




யோவ்...டிரைவர் வண்டிய மெதுவா ஒட்டுயா, பயமா இருக்கு..... உனக்காக மெதுவா போக முடியாது, பயமா இருந்தா என்னை மாதிரி கண்ணை மூடிக்கோ





###########################




கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ... அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?





###########################




என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...!! உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...





###########################




இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...யாருங்க அந்த மகாலட்சுமி ?.... எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!





###########################




என்னங்க... உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...? (கணவன்): ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்.





###########################




உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு... (மனைவி): என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...





###########################




வீழ்வதில் வெட்கப் படாதே! வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்! ...... இப்படி எல்லாம் சொல்லி வீழ்தவன் மனச நேகடிக்காதிங்க!!





###########################




"சினிமா பாட்டுதான்" "சரி எந்த படத்துல இருந்து?" "சினிமா படத்துல இருந்துதான்" "அய்யோ!" THE END!!





###########################




"வணக்கம் எத்தனை தடவை சொல்றது?" "அதில்லைங்க" "எது இல்லை?" "சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?" "போன்ல இருந்துதான் பேசறேன்" "சரி என்ன ...





###########################




வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்..... "ஹலோ வணக்கம்!" "வணக்கம்! சொல்லுங்க..." "வணக்கம்தான் சொல்லிட்டேனே”!!!





###########################




உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்...உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்





###########################




என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய். வீட்டில் இன்னொரு ஜோடியும் இருக்கிறது





###########################




இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ? இல்லை அமைச்சரே! அரியாடனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்... அதனால் ...





###########################




கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?.... இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.





###########################




இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க கேட்டீங்களா? ... நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...





###########################




இதுவரை எத்தனை இலையான் அடித்தாய்?..மூன்று, இரண்டு ஆண். ஒன்று பெண்.ஆண், பெண் என்று எப்படிக் கண்டு பிடித்தாய்? பியர் போத்தலின் மேல் இரண்டு ...





###########################




கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன், உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.





###########################




நாம ஓடீப்போயிடலாமா ... செருப்பு பிஞ்சுடும் ... பரவாயில்லை போகும்போது தச்சுக்கலாம்





###########################




"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு? அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.





###########################




கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு? அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.





###########################




காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது. (செக் பண்ணிவிட்டு டாக்டர்) எனக்கு ஒன்னும் கேட்கலையே? அப்படியா! அப்போ ஏதாவது சிக்னல்ல நின்னிருக்குமோ!





###########################




மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.





###########################




எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார்... ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே? ..ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே!





###########################




இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... சிள்வர் ஸ்பூன், பிலாஸ்ரிக் ஸ்பூன் எல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்ல டாக்டர்





###########################




படத்துக்கு ஏன் “வாக்கின் இண்டர்வியூ” ன்னு தலைப்பு வைச்சாங்க? அப்பதான் இளைஞர்கள்லாம் அடிச்சுப் பிடிச்சு ஓடி வருவாங்க என்றுதான்





###########################




டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.





###########################




இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும். எனக்கு நீச்சல் தெரியாதே. கவலைப்படாதீங்க. குளத்துல தண்ணியே இர ...





###########################




வீட்டுக்கு ஒரு குதிரை இலவசம்னு சொல்லிட்டீங்க, கட்டுப்படியாகாது மன்னா!! வீட்டுக்கு ஒரு குதிரை லட்சியம். ஆனா, ஒரு கழுதை நிச்சயம்னு அறிக்கை ...





###########################




  மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?.... வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொ ...





###########################




மன்னா ! நீங்கள் அப்பா ஆகிவிட்டீர்கள் ! பலே! பலே! எந்த பெண் அம்மா ஆகியிருகிறாள் ?





###########################




என்ன ! மன்னா அ.அ.அ. போ. வா ? ஆமா, அம்சவல்லியை அழைத்துக் கொண்டு அந்தபுரம் போய்விட்டார் !.





###########################




போடா பண்ணி! என்ன வில்லத்தனம்................ ஆகா.......... அவனா நீ! வந்துட்டாண்டா வந்துட்டாண்டாஆஆ!!!





###########################




ஹலோ............. டுபாய்யா...? என்னுடைய பிரதர் மார்க் இருக்காறாரா.....? ஏய் நீதான் பேசுறையா..... ஹௌ ஆர் யூ ????





###########################




எனக்கெல்லாம் ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி !





###########################




அந்த கட்டதுறைக்கு கட்டம் சரியில ......... நம்மகூட விளையாடுறதே வேலையா போச்சு ........





###########################




தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்.... எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?





###########################




யூ பார் மிஸ்டேக்..... மீ தேவா நம்பர்...... மை பேமிலி டோட்டல் டேமேஜ், 'ஐ சீ ஜஸ்ட் பார் ஜட்டி'





###########################




நெல்லுக்குள் அரிசிபோல, பூவுக்குள் தேன்போல, மண்ணுக்குள் வைரம்போல... உன் மனசைத் தொட்டு சொல்லு.. உன் மண்டைக்குள் களிமண்தானே....?





###########################




ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே? வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.





###########################




எத்தனபேர்ரு...? ஒருத்தனா...!?! உயிர் இருகனுமா? போகனுமா? இருந்தும் இல்லாம இருக்கானுமா...? இல்ல... இல்லாம இருக்கிறமாதிரி இருக்கனுமா...?





###########################




இல்ல... றேண்டுமே இல்லாமா....? டேய்... எறும்புத் தோல உரிக்கிறதுக்கு காண்டாமிருகமா... !?!





###########################




பால் வியாபாரம் ஆரம்பிச்சியே எப்படி போகிறது? மாட்டின் சொந்தகாரன் கண்ல மாட்டாதவரை நல்லாதான் போகுது!!





###########################




அந்த அம்பயர் ஏன் ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்? அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாஙகளாம்.





###########################




ஏன்டி திருடன இப்படி அடிக்கிற!?! ... அட இருட்டில நான், நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுட்டன்!!!!





###########################




கனவன்: அநாவசியமா! எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை எழுப்பாத! தாங்க மாட்ட!. மனைவி: பூனைக்குட்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்!.





###########################




காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...? காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.





###########################




செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.





###########################




அவள் அவன்கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினாலே, இப்ப என்னாச்சு தெரியுமா?... என்னாச்சு?.. பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான்.





###########################




  என் காதுக்குள்ள யாரோ பேசறாமாதிரி, அப்பறம் நிறைய சத்தங்கள்லாம் கேக்குது! அதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லனும்ன்னு அவசியம் இல்லயிங்கா... ஓ.கே!





###########################




கருமம், கண்றாவியா எப்படித்தான் இத குடிக்கிறீங்களோ? இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே, ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைத்தாயா?!





###########################




"டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது.... காட்டுங்க உங்க பர்ஸை!"





###########################




மாப்புள....... மாப்புள...... மாப்பூ....... வச்சிட்டான்யா ஆப்பூ !





###########################




டீ குடிக்க டீ குடிக்க... டீ குடிக்க.... துட்டு கொடுடா.... ! குடிக்கிறதே ஓசி டீ...பஞ்சித்திலேயும் பந்தாவுக்கு குறச்சலில்லை!





###########################




சொந்த ஊர் எது? .... அந்த அளவுக்கு வசதி இல்லீங்க.... சொந்த வீடுதான் இருக்கு!





###########################




மயிலே மயிலே இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமி்ழ் தெரியாது!





###########################




மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? டாக்டர்தான் தலைவலிச்சா இதை எடுத்து தடவனும்னு சொன்னார்!





###########################




எங்க 'ஆ' காட்டுங்க பாக்கலாம்! ஏன் டாக்டர் நீஐங்க 'ஆ' பார்ததே இல்லையா?





###########################




"மனைவி : “உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட,

அவங்களை ‘அறிவாளி’ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்”.

கணவன் : அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும்

கூட அதுதானே நடந்துட்டு இருக்குது."





###########################




"ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்

கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..

கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?"





###########################




"ஒரு கணவனும் மனைவியும் வெளியே சென்று வீடு திரும்பினர்.

அப்போதுதான் அவர்களிடம் கதவை

திறக்க திறவுகோல் இல்லை என அறிந்தனர்.

” அண்ணலும் ‘நோ கீ’னார்… அவளும் ‘நோ கீ’னார்”"





###########################




"ம்னைவி : “என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து

வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ

புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?”

கணவன் : “பேசாம தூங்கு, காலையில அவன் செத்து

கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்..” "





###########################




"டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.

மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது. டாக்டர்: ? ? ? ? ? "





###########################




"""யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து..

ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு..""

""சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு.""

""யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!"" "





###########################




"""என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்..""

""இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரத்தப்படறீங்க..?""

""நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!"" "





###########################




"காதலன்: அன்பே நாம் மோதிரம் மாற்றிக் கொள்வோமா?

காதலி: நான் போட்டிருப்பது தங்கம்.

நீங்க போட்டிருப்பது டூப்ளிகேட்.

நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க, மாத்திக்குவோம். காதலன்: ? ? ? ? ? "





###########################




" ""ஏன்யா வித்தவுட்லே போறே..... இதிலே ஏ.சி. கேக்குதா...?""

""எதிலேயும் நான் கொஞ்சம் கவுரவமா நடந்துக்குவேன் சார்!"" "





###########################




" டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க...""

""ஏன்""

""சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல..."" "





###########################




"பெரியவர்: படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா...

மாணவர்கள்: ஏன் பெருசு?...

பெரியவர்: பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும் நம்ம மேல பஸ் ஏறினாலும் 'டிக்கட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?... "





###########################




"""இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கயாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்களே நீங்க என்ன ஜோசியரா?""

""இல்ல, இந்த பஸ் டிரைவர்."""





###########################




"அம்மா: எதற்காக செல்லம் அழுதுக்கிட்டே வர்ற...?

சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும் போது சுத்தி தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா..

அம்மா: இதற்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சி இருப்பேன்.

சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்! "





###########################




"அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளி மருத்துவரிடம் கூறுகிறார்...

""டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை.

உங்களத்தான் நான் தெய்வமா நினைக்கிறேன்...""

""அப்போ... ஆபரேஷன் முடிஞ்தும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க..?"" "





###########################




"""டாக்டர்.. என் கணவருக்கு இப்போ எப்படி இருக்கு?""

""அவர் கவர்மெண்ட் ஆஃபீஸரா?""

""ஆமாம்""

""அப்போ சந்தோஷமான விஷயம்தான்.

கவர்மெண்ட்ல இருந்து நிறைய பணம் உங்களுக்கு வரப்போகுது."" "





###########################




"""நம்ம தலைவருக்கு ரொம்பத்தான் குசும்பு""

""ஏன்.. என்னாச்சு?""

""கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய முடியலையாம்...

கோர்ட்லயே ஒரு ரூம் வாடகைக்குக் கேக்கிறார்"" "





###########################




"""எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?""

""உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?""

""ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"" "





###########################




"""கூட்டத்துல பேச்சு நடுவே ஏன் உண்டி கொடுத்தோர் உயிர் குடுத்தோர்ன்னு தலைவர் சொல்றாரு..?""

""உண்டியல் குலுக்கறவன் புது ஆள் அவன் பத்திரமா தன்கிட்டே திரும்பி வரணம்னுதான் அப்படிப் பேசறார்.."""





###########################




"""போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?""

""எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே, நர்ஸ்!"" "





###########################




"""உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க?""

""பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சி"" "





###########################




"""வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?""

""கடினமான கல்விமுறைதான் காரணம்னு விடுதலை பண்ணியாச்சு.."" "





###########################




"""இது கொலையா தற்கொலையா?"" ""ஒருத்தனுக்குத்தான் தெரியும்.

ஆனா அவன் சொல்ல மாட்டான்."" ""யாரவன்?"" ""செத்தவன்தான்!"" "





###########################




"""யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?""

""என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்' ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"""





###########################




"இன்ஸ்பெக்டர்: என்னது...

இருபது கான்ஸ்டபிள்கள் சேர்ந்து போய் வெறும் ஆயிரம் ரூபா பெறுமானமுள்ள கள்ளச் சாராயத்தைத்தான் அழிக்க முடிஞ்சதா ஏன்...?

கான்ஸ்டபிள்: இருபதுபேரால், அதுக்கு மேலேயா சார் 'குடிக்க' முடியும்...?"""





###########################




"""என்னுடைய கல்யாண நாள் வரும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் சார் வரும்..""

""எதனால?"" ""நீங்க ரெண்டு பந்தியில் சாப்பிட்டும் மொய் எழுதாம போனீங்கல்ல.. அதனால!"""





###########################




"மனைவி: ஏங்க.. கொஞ்சம் வாங்க.. குழந்த அழுவுது..

கணவன்: அடி செருப்பால! உன்னை எவன்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது? "





###########################




"பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...

அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?

பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு. "





###########################




"""சே.. அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு..""

""பேசட்டுமே சார்... நம்ம கட்சி பிரமுகர்தானே..""

""நீங்க வேற... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்.."" "





###########################




"""நான் ஊருக்குப் போயிருந்தப்ப யார இங்க அழைச்சிக்கிட்டு வந்தீங்க?...

.வாஷ்பேஸின் கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கு?""

""அது நீ ஒட்டுனதாத்தான் இருக்கும்டி.....""

""இவ்வளவு சின்னதாவா நான் வக்கிறேன்?....

என்னிக்கு என் மூஞ்ச நிமுந்து பாத்திருக்கீங்க..ம்ஹும்!"" "





###########################




"""தலைவர் வரிகளை உயர்த்துவது தெரியாமல் உயர்த்தறாரே.. எப்படி..?""

""அரசியல்ல வர்றதுக்கு முன்னாலே..

எடுப்பது தெரியாமல் பஸ்ல பிக்பாக்கெட் செய்யற தொழில் செய்தவராச்சே!"" "





###########################




"""தலைவர் வரிகளை உயர்த்துவது தெரியாமல் உயர்த்தறாரே.. எப்படி..?""

""அரசியல்ல வர்றதுக்கு முன்னாலே..

எடுப்பது தெரியாமல் பஸ்ல பிக்பாக்கெட் செய்யற தொழில் செய்தவராச்சே!"" "





###########################




" ""திடீர்னு அதிகாரி வந்து சொஸைட்டியை செக் பண்ணி, ஏகப்பட்ட ஸ்டாக் குறைஞ்சதைக் கண்டுபிடிச்சதும், கிளார்க் பூச்சி மருந்தைக் குடிச்சுட்டார்!"" ""அய்யய்யோ... அப்புறம்?"" ""அப்புறமென்ன, பூச்சி மருந்தும் ஒரு பாட்டில் குறையுதுன்னு அதிகாரி ரிப்போர்ட் பண்ணிட்டார்!"""





###########################




"ஒரு ஜவுளிக் கடையில்..

""டேய் மொக்கை..

இந்த சட்டையைப் பார்த்தியா..?

2000 ரூபாயாம்.. சரியான கொள்ளைக்காரப் பசங்க..""

""சரி.. சரி.. பேசுனது போதும்.. சீக்கிரம் மூட்டையைக் கட்டு.. விடியப் போகுது..!"" "





###########################




"மொக்கையின் மகனிடம் வகுப்பு ஆசிரியர்..

""அரையாண்டுத் தேர்வில் நல்ல மார்க் வாங்கியிருக்கே சின்ன மொக்கை..

இதே போல ஆண்டுத் தேர்வுலயும் மார்க் எடுக்கணும்..""

""அது கொஞ்சம் கஷ்டம்தான்..

அந்த வினாத்தாள் எங்க அப்பா வேலை செய்யற அச்சகத்தில பிரிண்ட் பண்றாங்களோ என்னவோ..?"" "





###########################




"""உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன்""

""சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா?"" "





###########################




"""என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?""

""ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"" "





###########################




"""பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு.""

""ஏன்?""

""பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்."" "





###########################




"""எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...""

""அடையாளம் சொல்லுங்க...""

""அது கோபமா குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"" "





###########################




"""பேஷண்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தாச்சு ஆனா, மயக்க மருந்து ஸ்டாக் இல்லை டாக்டர், என்ன செய்யறது?""

""ஆபத்துக்குப் பாவமில்லை.. என் ஷூ சாக்ஸை அவர் மூக்குக்கிட்டே லேசா காட்டிடு!"""





###########################




"கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை.

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்! "





###########################




"""விக்கி, ராம் பிருந்தானு இருந்த அவரோட குழந்தைகள் பெயரையெல்லாம் ஏன் விஸ்கி, ரம், பிராந்தினு மாத்திட்டாரு!""

""அவருக்கு 'டாஸ்மாக்' கடையிலே வேலை கிடைச்சிருக்காம், அந்தச் சந்தோஷம்!"" "





###########################




"""எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?""

""உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"" ""ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"""





###########################




"""உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!""

""அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?"""





###########################




"""சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்.""

""யாரது?"" ""ஸ்டுடியோ வாட்சுமேன்!"" "





###########################




"""நாடு ரொம்பதான் கெட்டுக்கிடக்கு"" ""எப்படி சொல்றே?""

""விமான கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு விமானத்தில் சமைத்து போட ஆள் தேவை என்று விளம்பரம் வந்திருக்கு.."" "





###########################




"""எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?""

""இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே""

""எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"" "





###########################




"""ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?""

""நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..."""





###########################




"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?""

""அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."" "





###########################




" இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து.... ""யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..""

""ஏன்..?"" ""பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"""





###########################




"""பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்""

""ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு"" "





###########################




"""போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?""

""சத்தம் போடாம வாரும். அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்.."" "





###########################




"""முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?""

""டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!"" "





###########################




"""கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?""

""ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"" "





###########################




" ""உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?""

""அதனால உனக்கென்ன?"" ""நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே"""





###########################




"""புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?""

""தெரியலையே..""

""புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்"" "





###########################




"""எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?""

""இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!"" "





###########################




"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட 'செக்கப்' பண்ணக் கிளம்பிடுவாரு...""

""உடம்பு நல்லா இருந்தா...?"" ""பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"





###########################




"காதலன்: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.

காதலி: அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?

காதலன்: மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை... காதலி: !!!!"





###########################




"""பாத்திரத்துல உள்ள தண்ணியில் கையை நனைக்கச் சொல்றீங்களே ஏன்?""

""எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் கையை நனைக்காம அவங்களை அனுப்புறதில்லை.."""





###########################




"""லோன் செக்ஷனில் வேலை பார்க்கிறவரை மாத்திடணும் சார்..""

""ஏன்..?"" ""எதோ கடனுக்கு வேலை பார்க்கிறார்"" "





###########################




"""அடிக்கடி திருடிட்டு என் முன்னாடி வந்து நிக்கிறியே, உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே?""

""ஒரு நாற்காலி போட்டா, நிக்காம சௌகரியமா உட்கார்ந்துக்கலாம்னுதான் எசமான்!"" "





###########################




" ""என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை..""

""அப்படி என்ன பண்ணிட்டான்..?"" ""என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்."""





###########################




" ""சார்.. நான் போகவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டைமுக்கு வருதா..?""

ஸ்டேஷன் மாஸ்டர்: டைமுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன..?

நாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லே.. தண்டவாளத்தில வந்தா போதும்..!"" "





###########################




"""டாக்டர் எனக்கு கூச்சமா இருக்குது.""

""எதுனாலும் டாக்டர்கிட்ட கூச்சப்படாமல் சொல்லுங்க.""

""எனக்கு பல்லு கூச்சமா இருக்கு டாக்டர்."" "





###########################




"""கல்யாணத்தில் மொய் எழுத மறந்துட்டு வந்திட்டேன்..""

""அப்ப நீ கல்யாண பரபரப்புல 'மொய் மறந்துட்டே'னு சொல்லு."" "





###########################




"மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்...

சுமதி: ஏன்?.. மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது.. "





###########################




"""அந்த ஆள் புத்தகத்தை தின்கிறார் ஏன்?""

""அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு."" "





###########################




" ""ஆபரேஷன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர்?""

""நான் பிழைக்கிறதே ஆபரேஷன் பண்ணித்தானே!"" "





###########################




"வந்தவர்: என் மனைவிக்கு 'வீசிங்' ப்ராப்ளம் டாக்டர்.

டாக்டர்: அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க?

வந்தவர்: பாத்திரங்களை 'வீசி' எறியறாளே என் மேல... "





###########################




" ""நான் நீச்சல் கத்துக்கேறன்..""

""எங்கே...?"" ""தண்ணியிலதான்...!"" "





###########################




" ""என் கணவர் என்னை கடி ஜோக் சொல்ல சொன்னார், நான் மாட்டேன்னிட்டேன்.""

""ஏன்டி?"" ""அவரை வேணும்மின்னே 'no'கடிக்கதான்."" "





###########################




" ""குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?""

""அது மேல தான் ""weight"" போடரோம் இல்ல?"" "





###########################




" ""வாத்தியாரை விட கோழி தான் Great எப்படி?""

""வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்."" "





###########################




"""ஃபிளவருக்கும் லவ்வருக்கும் என்ன வித்தியாசம்?""

""ஃபிளவர் வாடிப்போயிடும் லவ்வர் ஓடிப்போயிடும்!"" "





###########################




" பூனை: உன் வயசு என்ன?

யானை: பத்து வயசு

பூனை: ஆனா நீ பாக்கறதுக்கு ரொம்ப பெரிசா தெரியிறியே

யானை: ஆமாம், ஏன்னா நான் காம்ப்ளான் பாய்

பூனை: எனக்கு 15 வயசு

யானை: ஆனா நீ ரொம்ப சின்னதா தெரியிறியே

பூனை: அதுக்கு காரணம் பாண்ட்ஸ் ஏஜ் மிராக்கிள் "





###########################




"""காலம் எப்படி மாறிப்போச்சு பாத்தியா..""

""என்ன சொல்ற?""

""செய்யற ஊழலைக்கூட மரியாதையா சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..2ஜி..3ஜி ன்னு"" "





###########################




" ""தலைவர் ஏன் ரொம்பக் கோபமா இருக்கார்..""

""யாரோ அவரை 'ராஜா'போல வாழணும்னு வாழ்த்திட்டுப் போனாராம்"" "





###########################




" ""சார், ஆறு வருஷத்துல நீங்க போட்ட பணம் இரட்டிப்பாகும்னு சொன்னீங்களே.. என்ன ஆச்சு?""

""இரட்டிப்பாகும்னு தானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே!"""





###########################




"""என் மகன் ஜெயில்ல இருக்கான்.."" ""ஏன்?""

""ஒரு மொழிப் பிரச்சினைல மாட்டிக்கிட்டான். அதான்.""

""என்ன மொழிப் பிரச்சினை?"" ""தேன் மொழிய கெடுத்துட்டான்."""





###########################




"""டிக்கெட் எல்லாம் முடிஞ்சு போச்சு எல்லாம் போங்க... போங்கன்னு சொல்றோம்ல!""

""ஏன் என்ன ஆச்சு ஃபுல் ஆயிடுச்சா?"" ""நீங்க வேற மேட்சே அங்க முடிஞ்சு போச்சு!"" "





###########################




"""ஏன்டா நாய் படம் வரைஞ்சுட்டு வாய் மட்டும் வரையாம வச்சு இருக்க?""

""ஏன்னா.. அது வாயில்லா பிராணி சார்!"""





###########################




"ஒருவன்: தொண்டர்களின் கன்னம் எல்லாம் வீங்கியிருக்கின்றதே....

ஏன்? தொண்டர்: தலைவர் ""அறை"" கூவல் விடுத்தார்ல அதான்....... "





###########################




"சிலந்தி 1: ஏன் அந்த சிலந்தி எல்லோருக்கும் இனிப்பு கொடுக்கின்றது?

சிலந்தி 2: அது புதிதாய் வெப் சைட் ஆரம்பிச்சிருக்காம்....... "





###########################




"தமிழ் ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க?

மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க ""துன்பம் வரும் வேலையிலே"" சிரிங்கன்னு, அதான்......"





###########################




"""என்னப்பா காபியில 'ஈ' செத்துக்கிடக்குது...?""

""ஸ்பெஷல் காபியிலதான் சார் 'ஈ' உயிரோட இருக்கும்"" "





###########################




"""பூக்காரி பொண்ண கட்டினது தப்பா போச்சு..""

""ஏன்?""

""பின்ன.. தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறா..."" "





###########################




"மேனேஜர்: டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நான் அடிச்சதும் மீதி எத்தனை ஈ இருக்கும்? வேலைக்கு

வந்தவர்: ஒன்று.. மேனேஜர்: ஒன்றா.. எப்படி? வேலைக்கு வந்தவர்: நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்."





###########################




"தோழி: இரவில் உன் குழந்தை அழுதால் யார் எழுந்திருப்பார்கள்!

தாய்: கட்டிடத்திலுள்ள அனைவருமேதான். "





###########################




மகனிடம் தந்தை, யாரிடம் பேசினாலும் டி.டா போட்டு மரியாதை குறைவா பேசக்கூடாது?" "சரி, டா டி"





###########################




"கணவன்: கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா? இல்லையா?

மனைவி: நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதோ வந்துடுறேன்னு.. இருங்க.. "





###########################




"""பெற்றோருக்கு பயந்து காதலை விட்ட காலம்போய்...

இப்போது பெட்ரோலுக்கு பயந்து காதலை விடுகிறார்கள் இளைஞர்கள்...!!"" "





###########################




"சாப்பிட்டு முடிச்சுட்டீங்களா, பில் போடலாமா?" "வேண்டாம், கிரைண்டர்ல அரிசிய போடுங்க...."





###########################




"""கபாலி உன்னை போலீஸ் தேடுது""

""நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே""

""அதான், ஏன் பண்ணலேன்னு கேட்க தேடுது"""





###########################




"""அன்பே, என்னை மட்டும் பிடிக்கலேனு சொல்லிடாதே...

ப்ளீஸ்."" ""சரி, உன் குடும்பமே பிடிக்கல"" "





###########################




"சார், இவன் கார்ல ஓவர் ஸ்பீட் போனான்.." நீங்க, எப்பிடி மடக்கினீங்க?" "சைக்கிள்ல போய்" 





###########################




"உங்க பையன் எதிர்காலத்துல பெரிய கிரிக்கெட் பிளேயரா வருவான்னு தோணுது!

அப்படியா எப்படி சொல்றீங்க?

வரலாறு பாடத்துல அவன் ஃபெயில் ஆவறதுக்கு நான் எவ்வளவு காசு தருவேன்னு கேக்கறான். "





###########################




"ஒருவன்: அந்த படம் ஓடும் தியேட்டரில் கேட்டை திறப்பதற்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்.

மற்றவன்: என்னது படத்துக்கு அவ்வளவு கூட்டமா?!!!

ஒருவன்: இல்லப்பா, படம் பிடிக்கலன்னு எழுந்து ஓடி வரவங்களுக்கு வெளியே போறதுக்கு கேட்டை திறக்க லஞ்சம் கேட்கிறார்கள். "





###########################




"அம்மா: ஏன்டா இந்த வருஷம் ஃபெயிலான?

மகன்: 12 வருடம் கடுமையா படிச்சதுக்கு ஆசிரியர்களாக பார்த்து ஓய்வு குடுத்திருக்காங்க. (அரசியல் பாணியில்)

அம்மா: ???????????? "





###########################




"அப்பா: உனக்கு எந்த வாசனம்மா புடிக்கும்?

மகள்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனத்தாம்பா புடிக்கும்

அப்பா: ?!?!? "





###########################




"""அந்த பட்டாசுக்காரருக்கு ரொம்பத் தான் துணிச்சல்!"" ""ஏன்?""

""ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கறவங்களுக்கு உண்மையான வெடிகுண்டு இரண்டு இனாமா தரப்படும்னு விளம்பரம் செஞ்சிருக்காரே."""





###########################




"""ஏன் மாப்பிள்ளை விசில் அடிச்சாத்தான் தாலி கட்டுவேன்னு அடம்பிடிக்கிறார்?""

""பின்ன பேருந்து ஓட்டுநராச்சே.. அதான்."" "





###########################




அவன்: வா நானும் நீயும் ஓடிடலாம்.... அவள்: செருப்பு பிஞ்சிடும் அவன்: பரவால்ல.. கையில எடுத்துட்டு ஓடிடலாம்...





###########################




"ஒருவன்: சார்.. சார்.. என் நாய் தொலைஞ்சு போச்சு.

கண்டுபிடிச்சு கொடுங்க.

போலீஸ்: ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க.

ஒருவன்: என்னைப் பார்த்தால் வாலாட்டும். "





###########################




"""அப்பாங்கற மரியாதை இல்லாம என் முன்னாடியே 'தண்ணி' அடிக்கிறியா?""

""நான் உனக்குப் பின்னாலதான் நின்னு குடிச்சிட்டிருந்தேன், நீதான் படார்னு திரும்பிட்ட!"""





###########################




"""ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சி.""

""ஏன்?"" ""எப்பப் பார்த்தாலும் எடையை குறை எடையை குறை என்கிறார்."" "





###########################




"""டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.""

இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு..???"" "





###########################




"டீச்சர்: ஏன்டா நான் வரும்போது மட்டும் கண்ணாடி போடுற?

மாணவன்: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போட சொன்னார்! "





###########################




"""போஸ்ட் ஆபீஸ்ல என்ன மிருகம் இருக்கும்?""

""யோசிங்க..?"" ... ... ""தெரியலையா..?"" ""ஒட்ட-கம் இருக்கும்."" "





###########################




"""பஸ்ல ஏறி உட்கார்ந்ததும் தூக்கம் தூக்கமா.. வருது டாக்டர்.""

""தூங்க வேண்டியதுதானே?"" ""அப்புறம் பஸ்ஸை எப்படி ஓட்டுறது...."" "





###########################




"விஸ்கியும் தண்ணியும் கல்யாணம் பண்ணினா என்ன ஆகும்? " 'தண்ணி' குடித்தனம் நடத்தும்."





###########################




"டாக்டர்... திடீர்னு உடம்பு காற்றுல பறக்கற மாதிரியே இருக்கு..." "அப்ப நீங்க பேப்பர் வெயிட்டை எப்பவும் பாக்கெட்லயே வச்சுக்குங்க...!" 





###########################




"நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக்கிட்டு நின்னேன்." "அப்புறம்....?" "கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன்.





###########################




"""பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?""

""ரைட் சொல்லிட்டார்."""





###########################




"""என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்.""

""ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க.""

""செகண்ட் கிளாஸ்தான்...!"" "





###########################




"""டென்சன் அதிகமானால் என்னவாகும்?""

""லெவன் சன் ஆகும்."" "





###########################




"அனகோண்டாக்கும், அலுமினிய குண்டாக்கும் என்ன வித்தியாசம்? தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா...

தண்ணி உள்ள இருந்தால் அது அலுமினிய குண்டா."" "





###########################




"டாக்டர்! எனக்கு பல் ஆடுது!" "எந்த பாட்டுக்கு?" 





###########################




"""குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?""

""தெரியல!' ""குளிக்கும் போதே துவட்ட முடியாதே!"""





###########################




"எங்க தாத்தா கடி ஜோக்கே சொல்ல மாட்டார்..." "ஏன்?" "அவருக்குத்தான் பல் இல்லையே." 





###########################




"""இங்க கணபதி ஸ்ரீனிவாச கோபால சுப்ரமணியன் வீடு எது?""

""பேரை இப்படி மொட்டையா சொன்னா..எப்படி..அவர் இனிஷியல் என்ன?"" "





###########################




"""டேம்லே வேலை பார்க்கிறவரோட பெண்ணைக் கட்டினது பெரிய வம்பாப் போச்சுன்னு சொல்றீயே! ஏன்?""

""தினமும் ஐந்தாறு கன அடி கண்ணீர் விடுறா?"" "





###########################




" ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?

மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்! "





###########################




"""அந்த லைட் மியூஸிக் பாடகருக்கு இன்னும் பணம் தரலைன்னு எப்படிச் சொல்றே?""

""அதான் கொக்கு நறநற கோழி நறநற...ன்னு பாடுறாரே!"" "





###########################




" ""தேங்காயிலும் தண்ணீர் இருக்கு........பூமியிலும் தண்ணீர் இருக்கு......""

""அதுக்காக தேங்காயிலதான் போர் போட முடியுமா.......

இல்ல பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா......

.இத சொன்னா நம்மள லூசுனு சொல்லுவான்....."" "





###########################




"ஸ்டாலின் கனிமொழி அழகிரி முவரும் விமானத்தில் செல்கிறார்கள்

ஸ்டாலின்: நான் ஒரு நூறு ரூபாயை கீழே போடப்போறேன் ஒரு ஆள் சந்தோசப்படுவான்.

கனிமொழி: நான் இரண்டு ஐம்பது ரூபாயை கீழே போடப்போறேன் இரண்டு பேர் சந்தோசப்படுவாங்க.

அழகிரி: நான் நூறு ஒரு ரூபாயை கீழே போடப்போறேன் நூறு பேர் சந்தோசப்படுவாங்க.

விமானி: உங்க மூணு பேரையும் தூக்கி கீழே போட்டா தமிழ்நாடே சந்தோசப்படும்..... "





###########################




"""இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?""

""எதுக்கு?"" ""ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு!"" "





###########################




"பாபு: இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?

கோபு: நான்கு! பாபு: இல்லை / 22 "





###########################




"காவல் அதிகாரி: உங்களை அரெஸ்ட் பண்றேன்... வாங்க ஆஸ்பத்திரிக்கு... அரசியல்வாதி: எதுக்கு?

காவல் அதிகாரி: எப்பவும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீங்க. அதான்."





###########################




"""இது என்ன தமிழ் மாதம்- 'ரம்பா மாதம்'?!

அப்படி ஒரு மாதம் இருக்கா..?"" ""அதுவந்துங்க... தை(Thigh) மாதம்!"" "





###########################




"இஞ்ஜினீயரிங் வகுப்பறையில்...

ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட ஃபிரெண்ட் ஒருத்தன் திருச்சில 5000 ரூபாய் வாங்கிண்டு இருந்தான், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கான்.

மாணவர்: என்ன கடனா? "





###########################




"ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி..

நண்பன்: எப்புடிடா? ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!"





###########################




"""பறவைகள் எல்லாம் ஏன் வெளிநாட்டிலயிருந்து பறந்து வருது தெரியுமா?""

""ஏன்...?"" ""நடந்து வந்தா டைம் ஆகும்ல... அதனாலத்தான்!"" "





###########################




"காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.

காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.

காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது."





###########################




"""தும்பாவிலும், ஸ்ரீஹரிகோட்டாவிலும் சிவகாசி சின்னப் பசங்களுக்கு உடனே வேலை கிடைக்கும்!""

""அப்படி என்ன ஸ்பெஷல்?"" ""ராக்கெட் செய்யுறதிலே கெட்டிக்காரங்களாச்சே!"""





###########################




"""கீழ் வீட்டுக்காரங்களுக்கு நாட்டுப்பற்று அதிகம்!""

""என்ன செஞ்சாங்க?"" ""குடும்பத்தோடு! 'நாட்டு வெடிகுண்டு' தயாரிக்கிறாங்க!"" "





###########################




"""கடிஜோக்ஸ் எல்லாம் எழுதுவாரே அவர் எங்கே வேலை செய்யறார்?""

""பிளேடு கம்பெனியிலேங்க!"""





###########################




"""ஒருவன் எப்போது முழு மனிதன் ஆகிறான்?""

கடைசி சென்டிமீட்டர் வரை வளர்ந்து முடித்ததும்."""





###########################




" ""ஏன் இந்த கோழிய பிடிக்க இப்படி பயப்படுறீங்க...?""

""அது நெருப்புக் கோழியாச்சே.."" "





###########################




"""படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே... ஏன்?""

""மசாலா படமாச்சே... அதான்!"" "





###########################




"ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன்?

மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார்!"





###########################




"""வாயாடி மாமியா கூட நம்மாலே கத்த முடியல்லே.....!""

""அதனாலே.... என்ன செஞ்சே?"" ரெண்டு நாயை வாங்கிக் குரைக்க விட்டுட்டேன்!"" "





###########################




"""என் மனைவி பஸ் ஸ்டாண்டு பாத்ரூமுக்கு போய்ட்டு வரேன்னு போயி நாலுமணி நேரம் ஆகுது!""

""அப்படியா? பேரம் பேசி முடிச்சிருக்க மாட்டாங்க!"" "





###########################




" ""கண்ணே 'நாளெல்லாம் பௌர்ணமி' நீ""

""அப்போ! இனிமே அமாவாசை விரதம் இருக்க முடியாது!"" "





###########################




"""என் பொண்ணுக்கு சமைக்கத்தெரியாது. அதனாலே சமையல் தெரிஞ்ச மாப்பிள்ளையாப் பார்க்கணும்.""

""பேசாமே, 'சமையல் வேலைக்கு கலியாணமாகாத இளைஞன் தேவை'ன்னு விளம்பரம் குடுத்துடலாமே"" "





###########################




" கணவன்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு?

மனைவி: பொங்கலிலே சர்க்கரை போட்டிருக்கேன்...! "





###########################




"ஒருவர்: கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு உங்க பொண்ணை வைத்து சீட்டு எடுக்கச் சொல்றீங்களே...?

மற்றொருவர்: பின்ன...! என் பெண்ணைக் கிளி மாதிரில்ல வளர்த்திருக்கேன். "





###########################




"ஒருவர்: நம்ம குப்புசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்...

மற்றொருவர்: அப்ப குப்புசாமியை அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு சொல்லு..."





###########################




"""பெண்ணோட அப்பா ரொம்பப் பசையுள்ளவருன்னு எப்படிச் சொல்றே?""

""கோந்து கம்பெனி வச்சிருக்காரே!"" "





###########################




"மாட்டுக்கு லோன் போட்டேன்... ஏன் கொடுக்கல்லே?" "மாட்டு லோனை மனுஷன்கிட்டே எப்படிக் கொடுக்க முடியும்?" 





###########################




கடவுள் ஏன் கல்லானார்?" "உலோகத்தில இருந்தா கடத்திட்டுப் போயிடுறாங்களே!" 





###########################




"என்னதான் பெரிய வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்கமுடியாது." 





###########################




"பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகணும்."





###########################




செருப்பு இல்லாம நாம நடக்கலாம்; ஆனா நாம இல்லாம செருப்பு நடக்கமுடியாது." 





###########################




"""என்னதான் நீங்க சென்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கௌம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது...

சங்கு ஊதிவிட்டுதான் கௌம்பணும்..."" "





###########################




"""பீச்லே கடலை விக்கற பையன் ஏன் சோகமா இருக்கான்?""

""இங்கே வர்றவங்க அவங்களே கடலை போட்டுக்கறாங்களேன்னுதான்."""





###########################




"என்கவுண்டர் ஏகம்பரம்: கன்னியாகுமரியிலிருந்து, மெட்ராஸ் வரைக்கும் ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்கடா...

அடி வாங்கறதுக்கு... அண்டர்ஸ்டேண்ட் வடிவேலு: ஹலோ நேத்து அடிக்க வரேன்னீங்க.... இன்னும் வரவே இல்ல...

மக்கள்: இதோ வரோம்டா எல்லோருமே...

வடிவேலு: ஐயோ... ஒண்ணு கூடிட்டாங்கப்பு... ஒண்ணு கூடிட்டாங்க...

"





###########################




" ""நம்ம அமைச்சரு... குழாயடி குப்பம்மாளை ஏன் வரச் சொல்லியிருக்கார்?""

""சட்டமன்றத்திலே அமைச்சர் பேச, ஏச்சுரை தயார் பண்ணவாம்!"" "





###########################




"""உங்க கடிதத்தைப் பார்த்துவிட்டு வந்த உங்க மனைவி ஏன் உங்களை அடிச்சாங்க?""

""கடிதத்தில் சனியன்றே புறப்பட்டு வரவும்னு எழுதியிருந்த இடத்திலே 'றே' இல்லையாம்."" "





###########################




" ""மொபைல் அது இதுன்னு வந்துட்டதால இப்பெல்லாம் கல்யாணத்துக்கு வாழ்த்து தந்தி வர்றது இல்லைங்க...""

""அங்க பாருங்க... சாப்பிடுற இடத்தில... வாழ்த்த ஒரே தொந்திகளா வந்திருக்காங்க...!"" "





###########################




"""என்னங்க... நம்ம கல்யாண நாளைக் கூட மறந்து விட்டீர்களே...!""

""உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விசயத்தை மறக்க மாட்டேன்னு...!"""





###########################




"""அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?""

""ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை....

அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிட்டீங்கன்னா நீங்க கொத்தடிமை...."" "





###########################




" ""எல்லா ஸ்டேஜ்லயும் டான்ஸ் ஆடலாம்..

ஆனா கோமா ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட முடியுமா?"" "





###########################




"""நைட்ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்..

அதுவே மார்னிங்ல கடிச்சா குட்மார்னிங் வைக்க முடியுமா?"" "





###########################




"ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...

மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...? "





###########################




"ஒருவன்: ""இரவிலே கொள்ளை அடிக்கிறவனைத் திருடன்னு சொல்லுறோம்.

அதுவே பகல்லே கொள்ளை அடிக்கிறவனை என்னன்னு சொல்லுவாங்க சொல்லு..."" மற்றவன்: ""அரசியல்வாதி"" "





###########################




" ""என் மூளையை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததிலே ஒண்ணுமே இல்லேன்னு டாக்டர் சொல்லிட்டார்.""

""இது ஏற்கெனவே தெரிந்ததுதானே! ஏன் வீணாச் செலவு செய்தே?"" "





###########################




"""நம்ம தலைவரு ஒருமைப்பாட்டிலே ரொம்ப நம்பிக்கை உடையவருன்னு எப்படிச் சொல்றே?""

""அவரு இந்தியாவில சுரண்டாத மாநிலமே கிடையாதுல்ல."" "





###########################




"காதலன்: பேரழகிகளை பிடிக்காது....

காதலி: என்னை உனக்கு பிடிக்காதா?

காதலன்: யார் சொன்னா? உன் தங்கச்சியைத்தான் பிடிக்காது என்றேன். "





###########################




"""ஏன்டி! டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல...""

""ஆமாம்...அதுக்கென்ன...?"" ""நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"" "





###########################




"""பொதுக் கூட்ட மேடையிலே ஏன் தீப்பிடிச்சிருக்கு?""

""தலைவர் அனல் பறக்கப் பேசினாராம்!"" "





###########################




"""என் பையனை 'ராசா' மாதிரி வளர்க்கப்போறேன்!""

""ஐயையோ! அப்படியெல்லாம் வளர்க்காதீங்க... நல்ல பையனா வளர்க்கப் பாருங்க!"" "





###########################




"""என் பையனை 'ராசா' மாதிரி வளர்க்கப்போறேன்!""

""ஐயையோ! அப்படியெல்லாம் வளர்க்காதீங்க... நல்ல பையனா வளர்க்கப் பாருங்க!"" "





###########################




"""நாம சம்பாதிச்ச சொத்தெல்லாம் அநியாயமாப் போயிடுச்சே...""

""சுனாமியிலேயா?"" ""இல்ல... பினாமியிலே!"" "





###########################




" ""நம்ம தலைவர் கிட்ட 'என் குழந்தைக்கு ஒரு இனிமையான பெயர் வைங்க'ன்னு சொன்னது தப்பா போச்சு. ""ஏன். என்ன பெயர் வெச்சாரு?"" ""'அதிமதுரம்'ன்னு வெச்சிட்டாரு!"" "





###########################




" ""ஆட்சியில பங்கு கேட்க மாட்டோம்னு கூட்டணித் தலைவர்கள் எல்லாம் சொல்லிட்டாங்க தலைவரே...!""

""ரொம்ப சந்தோஷம்...!"" ""ஆனா, ஊழல்ல பங்கு கேட்பாங்களாம்...!"" "





###########################




"""முதலிரவு அறைக்குள்ள நுழைந்ததும் லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?""

""மாப்பிள்ளை பயந்து ஓடிவிடக் கூடாதுன்னுதான்."" "





###########################




"மாமா: ""போன மாதம்தானே உங்க பொண்ணுக்கு காதுகுத்து விழா நடத்தினீங்க அதுக்குள்ள அடுத்த அழைப்பிதழ் கொண்டு வந்துட்டீங்களே...?""

மச்சான்: ""இது மூக்குக் குத்து விழா அழைப்பிதழ்!"" "





###########################




"""நாட்டுக்காக பெட்ரோல், டீசலை மிச்சப்படுத்தறேன்னு சொல்றீங்களே...

நீங்க வச்சிருக்கிறது டூ வீலரா, போர் வீலரா?"" ""சைக்கிள்"". "





###########################




"தோழி: ""உன் மாமியார் புடவையையும் நீதான் துவைக்கிறியா? ஏன்?""

ஒருத்தி: ""எனக்குத்தான் மாமனார் இல்லையே...!"" "





###########################




"நீதிபதி: ""மூன்று பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டீர்களாமே...?""

குற்றவாளி: ""ஏமாற்றி திருமணம் செய்யலீங்க... நான் விரும்பித்தான் திருமணம் செய்துக்கிட்டேன்!"""





###########################




"ஒருத்தி: ""என் வீட்டுக்காரரு ரேஷன் கடைக்கு சுகர் வாங்க போனாலே எல்லோரும் ஷாக்காயிடுவாங்க.""

மற்றவள்: ""உன் வீட்டுக்காரரு என்ன செக்கிங் இன்ஸ்பெக்டரா?"" ஒருத்தி: ""அதெல்லாம் இல்ல. அவர் சுகர் பேஷண்டாச்சே...!"" "





###########################




"""கண்டக்டரைக் கட்சியிலே சேர்த்தது தப்பாப் போச்சு.""

""ஏன்?"" ""சில்லறை விஷயங்களுக்கெல்லாம் தகறாரு பண்றாரு."""





###########################




" ""வரிசையில் வந்த உங்களை நிறுத்தினவரிடம் 72 கிலோன்னு சொன்னீங்களே எதுக்கு?""

""அவர் என்னை நிறுத்துவதற்கு முன்னால வெயிட் பிளீஸ்..ன்னு சொன்னாரே!"" "





###########################




"""கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு உங்க பொண்ணை வைத்து சீட்டு எடுக்கச் சொல்றீங்களே...?""

""அப்புறம்...! என் பெண்ணைக் கிளி மாதிரில்ல வளர்த்திருக்கேன்."" "





###########################




"""பொண்ணு லட்டு மாதிரி இருப்பான்னு பையன் கிட்ட சொன்னது தப்பாப் போச்சு...!""

""ஏன்...?""

""கல்யாணத்திற்குப் பிறகு தினம் பொண்ணைக் கடித்து வைக்கிறானாம்."" "





###########################




"""பிப்ரவரியை ஏன் 'அபார்ஷன்' மாசம்னு சொல்றே?""

""அது மத்த மாசங்களைவிட அரை குறையாப் பிறந்திருக்கே!"" "





###########################




"என்ன... தலைவருக்கு தெலுங்கே தெரியாது! திடீர்னு இப்ப தெலுங்குல பொளந்து கட்டறாரு...?""

""ஆந்திராவுல இருந்து வந்த ஸ்பெஷல் சரக்கை இல்லே அடிச்சிருக்காரு...!"" "





###########################




"ஒருவன்: ""என் மனைவி பாடினா எங்க காலனில எல்லோரும் என்னை அதிசயமாப் பார்ப்பாங்க.""

மற்றவன்: ""அவ்வளவு அழகான குரலா?""

ஒருவன்: ""இல்லை. இவ பாட்டைத் தொடர்ந்து கேட்டு நான் எப்படி உயிரோட இருக்கேன்னுதான்."""





###########################




"""நீ ஏன்டா மொட்டை போட்டிருக்கே?""

""என் பொஞ்சாதிக்குத் தலையைத் தடவ வசதியாயிருக்குமே?"" "





###########################




" ""பொண்ணு ஆயில்ய நட்சத்திரமா?""

""ஆமா! எப்படிக் கரெக்டா சொல்றீங்க?""

""அதான் முகத்துல 'ஆயில்' வடியுதே!"" "





###########################




"""உங்க வீட்டு ஃபேன் ஏன் நின்னு நின்னு ஓடுது?""

""தவணை முறையிலே வாங்கினது!"" "





###########################




"""அழகாத்தானே குழந்தை பொறந்திருக்கு! அப்புறம் ஏன் அழுவுறாங்க?""

""பொறந்த குழந்தை அழலையே! அதான் அவுங்க அழுவுறாங்க!"""





###########################




"""சாப்பிட வாங்க நிகழ்ச்சியிலே புது அயிட்டங்களைச் செஞ்சு என் மனைவி பரிசு வாங்கிட்டா!""

""அப்படி என்னத்தைச் செஞ்சாங்க?"" பாவக்கா பாயாசம்! வெண்டைக்காய் புட்டு! வாழைக்கா ரசம்! சுண்டைக்காய் ஜூஸ்!"" "





###########################




" ""தூங்கிக்கிட்டிருக்கும் போது ஏன்டா மிதிக்கிறே?""

""உயிரோட இருக்கியான்னு பார்த்தேன்."""





###########################




"காட்டுக்குள்ளே 'டார்ச்லைட்' கூட இல்ல...! பயமா இருக்கே!" "பயப்படாதே! நக்ச'லைட்' இருக்கு!" 





###########################




"""மன்னர் அந்த ஆளுக்கு பத்துக் கசையடிகள் கொடுக்கச் சொல்கிறாரே, ஏன்?""

""ராஜா என்று அழைப்பதற்கு பதிலாக 'ராசா' என்று சொல்லிக் கேவலப்படுத்திவிட்டாராம்!"" "





###########################




"""அந்த நடிகை நடிப்புக்கு முழுக்குப் போடப் போறாங்களாம்...""ஏன்?""

""அவங்க முழுகாம இருக்காங்களாம்"""





###########################




"""என்னங்க வெளியில நம்ம நாய் பயங்கரமா குரைக்குது!""

""ரோட்ல போலீஸ்காரங்க யாராச்சும் போவாங்க!"" "





###########################




"""இனிமே இந்த வீட்ல யாரும் கண்­ணீர் சிந்த மாட்டாங்க...""

""ஏன்?"" ""டி.வி-யை வித்துட்டேன்."" "





###########################




" ""அந்த ஆளு டாஸ்மாக் பாருக்குள்ளே நுழைந்ததும் முதல் இடம் கொடுத்து மரியாதை செய்வாங்க.""

""ஏன்?"" ""மூத்த 'குடி'மகனாச்சே!"" "





###########################




"""பேங்க்லேர்ந்து பணம் எடுத்துட்டுத் திரும்பி வரும்போது கொள்ளைக்காரங்க என் கவனத்தைத் திசை திருப்ப, நடுரோட்டுல....""

""ரூபாய்த் தாளைப் போட்டிருந்தாங்களா?"" ""இல்ல.... வெங்காயத்தப் போட்டு இருந்தாங்க!"" "





###########################




" ""என்ன! அந்த பாகவதர் கச்சேரிக்கு கிழிஞ்ச சட்டைய போட்டுட்டு வர்றாரு?""

""அவரு எப்பவும் பஞ்சப்பாட்டுதான பாடுவாரு!"" "





###########################




" ""உங்க பொண்ணுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை பெரிய பணக்காரராமே?""

""ஆமாங்க.. வெங்காய வியாபாரி!"" "





###########################




" ""உனக்குத் தெரிஞ்ச 'வாயில்லா ஜீவன்' ஒன்றின் பேரைச் சொல்லு?""

""என் அப்பா சார்!"" "





###########################




"""போகி ஸ்பெஷல் லைவ் புரொகிராமுக்கு வந்த டைரக்டர் ஏன் கடுப்பாயிட்டார்?""

""போன்ல ஒரு நேயர், 'உங்க படம்லாம் மக்கும் குப்பையா, மக்கா குப்பையா'னு கேட்டாராம்!"" "





###########################




"""போருக்கு போற மன்னர் பொற்காசுகளை மூட்டையா கொண்டு போறாரே.....எதுக்கு?""

""போர்க்களத்துல அதை வீசி, எதிரி படைவீரர்களை திசை திருப்பத்தான்""! "





###########################




"""டாஸ்மாக்ல வேலை பார்க்கறதும், டெய்லர் கடையில வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்....""

""ஏன்னா, ரெண்டு கடையிலயும் வர்றவங்ககிட்ட ""ஆஃபா', 'ஃபுல்லா'ன்னுதான் முதல்ல கேக்கணும்! "





###########################




" ""எக்ஸ்ரே எடுக்க எவ்வளவு நேரம் ஆகும் டாக்டர்...?""

""நீங்க பாக்கெட்ல இருந்து பர்ஸை எடுக்க ஆகுற நேரம் தான்...!"" "





###########################




"""லீவ் லெட்டருக்கும் லவ் லெட்டருக்கும் என்ன வித்தியாசம்....?""

லீவ் லெட்டரை டீச்சர்கிட்ட கொடுக்கணும்; லவ் லெட்டரை டீச்சரோட பொண்ணுகிட்ட கொடுக்கணும்!"





###########################




"""உங்களை மரியாதைக் குறைவா திட்டிட்டேன்னு மனசு சங்கடமாவே இருந்தது...""

""அதுக்காக மன்னிப்பு கேட்க வந்திருக்கீங்களா....?""

""இல்லை... மரியாதையா திட்டிட்டுப் போலாம்னு வந்தேன்!"""





###########################




"வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு? 'வாலன்டைன்ஸ்டே' அன்னைக்கு!" 





###########################




"""குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்?""

""குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-நான் வயலினிஸ்ட்!!"" "





###########################




" ""தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? தெரியவில்லையே...""

'திரவப்பொருள்!' ""அதெப்படி?"" கொட்டுமே!"" "





###########################




" ""மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!""

""ஏன் அப்படி சொல்றே?"" ""மயிலுக்கு தமிழ் தெரியாதே!"" "





###########################




" ""உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?""

""அது 'ஈஸி' சேராச்சே!"" "





###########################




"""ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்....""

""ஏதாவது பிரச்சினையா...?""

""ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!""

அ.பேச்சியப்பன், ராஜபாளையம் "





###########################




"""அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட ""செக்கப்"" பண்ணக் கிளம்பிடுவாரு...""

""உடம்பு நல்லா இருந்தா...?""

""பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!""

எஸ்.ஏ.கருணாநிதி, ஓசூர் "





###########################




"""டாக்டர்.... சாதம் சாப்பிட்டா வெயிட் போடுவோமா?""

""இல்லியே, வெயிட் போட்டாத்தான் சாதமே சாப்பிட முடியும்...!""

""நீங்க என்ன சொல்றீங்க...?""

""நான் குக்கர்ல போடற வெயிட்டை சொல்றேன்!""

கூடல் "





###########################




"""விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, ""பேசாம"" நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!""

""பேசாம"" எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"" "





###########################




"போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?

திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன். "





###########################




"மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்

அப்பா: ஓன்னுமில்லை

மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.

அப்பா: ??????? "





###########################




"ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார்.

அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.

முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.

அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.

விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

""கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"""





###########################




" நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!

நபர் : ஏன்?

நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார்!!!! "





###########################




" கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?

ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?

கோபால் : நான் HOME WORK செய்யலை சார்! "





###########################




"நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது

சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும் "





###########################




"முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!

பின்னவர் : எப்படி?

முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன் "





###########################




" ""உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?""

""படுத்த படுக்கையா!"" "





###########################




"""அந்த ஆளுக்கு வியாபாரத்துல நல்ல பணம் வந்த உடனே உடம்பு ஊதிப் போச்சு...""

""என்ன வியாபாரம் பண்றாரு? பலூன் வியாபாரம்!"" "





###########################




" ""நம்ம தலைவர்கிட்ட சரக்கு இல்லாதப்பவும் ஒரு மணிநேரம் தொடர்ந்து பேசினாரே.... எப்படி?""

""சரக்கு""ல இருந்ததுனாலதான்!"" "





###########################




" ""பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை ஷாக் ஆகிட்டாரா... அப்படி என்ன சொன்னாங்க?""

""பொண்ணுக்கு சமைக்கத் தெரியும்னு சொன்னாங்களாம்..."" "





###########################




"""தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?""

""தெரியலையே.... என்னது?""

""தலையிலே முடி இருக்கிறது தான்...!"" "





###########################




"அவள் அவன்கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினாலே, இப்ப என்னாச்சு தெரியுமா?...

என்னாச்சு?.. பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான். "





###########################




"என் காதுக்குள்ள யாரோ பேசறாமாதிரி, அப்பறம் நிறைய சத்தங்கள்லாம் கேக்குது!

அதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லனும்ன்னு அவசியம் இல்லயிங்கா... ஓ.கே! "





###########################




"கருமம், கண்றாவியா எப்படித்தான் இத குடிக்கிறீங்களோ?

இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே, ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைத்தாயா?! "





###########################




"டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது.... காட்டுங்க உங்க பர்ஸை!" 





###########################




" ""நம்ம தலைவர் தூக்கத்துல நடந்து, நடிகை நளினாஸ்ரீ வீட்டுக்குப் போயிட்டாராமே...?""

""அவர் போனது தூக்கத்துல இல்ல.... ஏக்கத்துல!"" "





###########################




" ""கோடை விடுமுறையைக் கொண்டாட கபாலிக்கிட்ட ஐடியா கேட்டது தப்பாப் போச்சா... ஏன்?""

""ஜெயிலை சுத்திப் பார்க்கலாம்... வாங்கன்னு கூப்பிடறான்!"" "





###########################




" ""இவர் மெகா சீரியல் தயாரிப்பாளரான்னு சந்தேகமா இருக்கு...""

""ஏன் சார்..?""

""கதையை ரெண்டு வரியில சொல்லச் சொல்றாரே!"" "





###########################




" ""உட்கார்ந்து பேசினா நமக்குள்ள சண்டையே வராது அத்தே...""

""அது வேண்டாம்னு தானே நின்னுக்கிட்டே கத்தறேன்...!"" "





###########################




" ""நாம எடுக்கற லவ் சப்ஜெக்ட் படத்தோட முடிவு சோகமா இருக்கும்...""

""ஹீரோவும் ஹீரோயினும் தற்கொலை பண்ணிக்கறாங்களா?""

""இல்ல ... ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறாங்க!"" "





###########################




"""எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வருது சார் ...""

""எப்படி..?""

""நான் ""சுடு தண்ணி""ன்னு சொல்றேன்; அவ அதை ""காபி""ன்னு சொல்றா..!"" "





###########################




" ""அரசியல்வாதிக்கும் தீவிரவாதிக்கும் என்ன வித்தியாசம்?""

""அரசியல்வாதிங்க தோள்ல ""துண்டு"" போடுவாங்க; தீவிரவாதிங்க ""குண்டு"" போடுவாங்க!"" "





###########################




" ""கடன் தொல்லை தாங்க முடியலை.... அதனால குடும்பத்தோடு....""

""குடும்பத்தோடு என்ன செய்யப் போறீங்க?""

""குடும்பத்தோடு படத்துக்குப் போகப் போறோம்!"""





###########################




"""நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க...""

""போகும் போது டாக்டர் ...?""

""வெறும் பாக்கெட்டோட போகலாம்!"" "





###########################




" ""மாப்பிள்ளை பெரிய ரவுடியா இருப்பாரோ..?""

""ஏன் அப்படிக் கேக்கறீங்க..?""

""பார்டர்ல ஜரிகை வச்ச லுங்கி வேணும்னு கேக்கறாரே!"" "





###########################




"""தலைவர் ஓவரா மணல் அள்ள ஆரம்பிச்சிட்டாருன்னு எப்படிச் சொல்றே...?""

""முன்னெல்லாம் அவர் பேச்சுல கனல் தெறிக்கும்; இப்ப மணல் தெறிக்குதே...!"" "





###########################




" ""தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்...""

""அடேங்கப்பா ... அப்படி என்ன பேசினாரு?"" ""பேசலைய்யா... குறட்டை விட்டாரு!"" "





###########################




"""என்னய்யா இது... படத்தோட கதையை சிலேட்டுல எழுதிட்டு வந்திருக்கே...""

""அடுத்த படத்துக்காவது வித்தியாசமா கதை எழுதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க!"""





###########################




" போலீஸ்காரர்: ""உம் மாமியார் தலையில ஏன் குழவிக்கல்லைத் தூக்கிப் போட்டீங்க?""

குற்றவாளி: ""அம்மிக்கல்ல என்னால் தூக்க முடியலை சார், அதான்."" "





###########################




"""கண்டக்டருக்கும் டிரைவருக்கும் என்ன வித்தியாசம்?""

""தனி தனியா டிக்கட் கொடுத்தா கண்டக்டர்; மொத்தமா கொடுத்தா டிரைவர்!"" "





###########################




" ""காத்தடிச்சா இப்படி வேர்க்குதே....""

""என்னய்யா சொல்றே.... காத்தடிச்சா எப்படி வேர்க்கும்?""

""நான் சைக்கிளுக்கு காத்தடிச்சேன்!"" "





###########################




" ""பாயாசத்துல ஏன் முந்திரி மிதக்குது?""

""முந்திரிக்கு நீச்சல் தெரியாதே... அதனால தான்!"" "





###########################




"""மழையில நனைஞ்சதுக்கா இப்படி கை, கால் எல்லாம் அடிபட்டிருக்கு...?""

""ஆமாம்.... பெய்தது கன மழை ஆச்சே!"" "





###########################




" ""குடிக்காம தெளிவா இருக்கும் போதுதான் இவர் தப்பே செய்யறார்...""

""எப்படி..?""

""குடிக்கணும்னு அப்பதானே முடிவெடுக்கறார்!"" "