நடிகை லட்சுமிராய்யைப் பார்த்து டோனி விழுந்து விழுந்து சிரிக்கிறாரே! ஏன்?”

“ கிரவுண்ட விட்டு வெளியே போன பால தூக்கி போடுன்னு சொன்னதுக்கு அரோமா பாக்கெட் பால தூக்கி போட்டுட்டாங்களாம்!”"





###########################




" ”எதுக்கு எதுக்கு இலவசமுன்னு விளம்பரம் பண்றதுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமப்போச்சு!”

” ஏன் என்னாச்சு!”

நடிகை நமீதாவோட படத்தப் பார்த்தா கனவுல இலவசமாவருவாங்கன்னு விளம்பரம் பண்ணுறாங்க!”"





###########################




" “ உன்ன எங்க வீட்டு ராணி மாதிரி வெச்சுக்குவேன்னு தலைவர் சொன்னத நம்பி ஏமார்ந்துட்டேன்!”

” ஏன் என்னாச்சு!”

 

” ராணியிங்கற பொண்ணு அவர் வீட்டு வேலக்காரிடீ!”"





###########################




" ‘’ பதவியில இருக்கிறப்போ பலரையும் சுரண்டி வாழ்ந்த நம்ம தலைவர் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கார்?”

‘’ செல்போன் ரீ-சார்ஜ் கர்ர்ட சுரண்டிகிட்டு இருக்கார்.”"





###########################




" ”காலங்காத்தால பல்பொடி கம்பனி முன்னால எதுக்கு எல்லாரும் வரிசையா நிக்கறாங்க?”

“ பல்பொடி விற்கப்படுமுன்னு எழுதுறதுக்கு பதிலா பால்பொடி விற்கப்படுமுன்னு எழுதியிட்டாங்களாம்!”"





###########################




" “ நான் கட்டிக்கப்போற பொண்ணுக்கு அண்ணன் தம்பி கிடையாது, இருந்திருந்தா என்ன மச்சான்னு கூப்பிட்டிருப்பாங்க!”

“ நடிகை நமீதாவ கட்டிக்க, அவங்களே உன்ன மச்சான்னு தாராளமா கூப்பிடுவாங்க!”"





###########################




" ” இந்த படத்துல நீங்க கொஞ்சம் கூட நடிக்கவே இல்ல!”

“ கதை யதார்த்தமுன்னு சொன்னாங்க, அதுல எப்பிடி நடிக்க முடியும்"





###########################




" “ திருட வந்த என் கால்ல விழுந்து பீரோ சாவி தர்றீயே ஏன்?”

“ நீங்க தானே மரியாதையா பீரோ சாவிய குடுன்னு கேட்டீங்க"





###########################




"“மன்னர் ஏன் புலவரை நையப் புடைக்கிறார்?”

” கொற்றவா, புறமுதுகிட்டு ஓடிவர கற்றவான்னு பாட்டு எழுதி வந்துட்டாராம்!”"





###########################




"” நிலவுல நாம எப்போ போகப்போறோமுன்னு மன்னர் அடிக்கடி கேட்கிறாரே ஏன்?”

” எதிரி மன்னன்கிட்டயிருந்து தப்பிச்சு கொஞ்ச நாள் அங்க போய்ஒழிஞ்சிருக்கலாமுன்னுதான்!”"





###########################




"” மன்னா இந்த முறை போர்களத்துலயிருந்து புறமுதுகிட்டு ஓடிவந்து தப்பிக்க முடியாது!”

” ஏன் முடியாது?”

” எதிரி மன்னன் இந்த முறை நம் அரண்மனை முன்பு போர்க்களம் அமைக்க திட்டமிட்டுள்ளானாம்”"





###########################




"” மன்னா எதிரி மன்னன் சேரன் செங்குட்டுவன் ரொம்ப பொல்லாதவர், புறமுதுகிட்டு ஓடினால் அவரும் ஓடி வந்து தங்கள் தலையில் ணொங்கென்று கொட்டிவிடுவார்”

” அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!”"





###########################




"” இளவரசர் அந்தப்புரம் நுழையிறப்போ புது சினிமா பாட்டு பாடிகிட்டு போறாரே என்ன பாட்டு?”

” டாடி மம்மி வீட்டில் இல்ல, தட போட யாருமில்லங்கற பாட்டுத்தான்!”"





###########################




"” செய்தி ஓலை இப்படி கனக்கிறதே அப்படியென்ன அந்த புறமுதுகுப்புலி எழுதியுள்ளான்!”

” போரை தவிர்க்கவும் ங்கற சின்ன விசயத்த நிறைய அடித்தல் திருத்தலோட எழுதிமுடிக்கிறப்போ ஓலை அதிகமாச்சு மன்னா!”"





###########################




"” நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை!”

” ஏன், என்ன நேர்ந்தது?”

” புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால் இடறி விழுந்துட்டாராம், அவர தாண்டி ஓடுன வீரர்கள் யாரும் அவர கண்டுக்கலையாம்!’‘"





###########################




"” நம்ம மன்னருக்கு நாய் அடி, பேயடி, பாய் அடி கிடைச்சுதாம்!”

” அதென்ன பாய் அடி?”

” ஒருநாள் மட்டும் மகாராணிய பாயில படுக்கச் சொல்லீட்டு மன்னர் கட்டுல்ல படுத்தாராம், மகாராணி பாயாலே சாத்து சாத்துன்னு சாத்திட்டாங்களாம்!”"





###########################




"” மன்னா பஸ்ஸுலதான் ரிவேர்ஸ் வரமாட்டீங்க, போர்களத்திலயுமா, வாங்க ஓடியிடலாம்!”

” நல்ல வேள ஞாபகப்படுத்தின, இந்தா ஓட ஆரம்பிச்சுட்டோமுல்ல!”"





###########################




"” நமது மன்னர் நடிகர் விஜய்ய சந்திக்கனுமுன்னு விருப்பப்படுறாரே ஏன்?”

” வில்லு மாதிரி வந்து எதிரி மன்னன போட்டுதள்ள முடியுமான்னு கேட்கிறதுக்குத்தானாம்!”"





###########################




"” ஆற்காட்டார் கத்திய தூக்கிகிட்டு மீன் சந்தைக்கு போறாரே ஏன்?”

” மின்வெட்டு இருக்கிறப்போ மீன்வெட்டும் இருக்கட்டுமேன்னுதானாம்!”"





###########################




"” தலைவர் ஏடாகூடமா கேள்வி கேட்டு வம்புல மாட்டிகிட்டாரு!”

” அப்படி என்ன கேட்டுட்டார்!”

” பிரிஞ்சிருந்த ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்திடிச்சு, ரெண்டு டீ.வி எப்போ ஒண்ணு சேரப்போவுதுன்னு கேட்டுட்டாராம்!”"





###########################




"” எதுக்கு அந்த காமடி நடிகர ஹீரோயின் போட்டு அடிக்கிறாங்க?”

” தனக்கு சிக்ஸ் பேக் இருக்குன்னு சொல்றதுக்கு பதிலா செக்ஸ் பேக் இருக்குன்னு சொல்லீட்டாராம்!”"





###########################




"” எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா ன்னு மூணு தடவ எழுதியிருக்கியே யாருப்பா அந்த நடிகை!”

“ த்ரி-ஷா தான்”"





###########################




"” போஸ்ட் மாஸ்டர் பொண்ண காதலிச்சது தப்பாப் போச்சு!”

” ஏன் என்னாச்சு?”

” லேசா ஒரசினா ஸ்டாம்பு மாதிரி ஒட்டிக்கிறா!”"





###########################




"‘’ இப்பொழுது மழை எதுவும் இல்லை, பிறகெதுக்கு குடை ரிப்பேர் காரன் அரண்மனைக்குள் வந்துள்ளான்?’’

‘’ நமது வெண்கொற்றக்குடையிலிருக்கும் ஓட்டையை பார்த்திருப்பான் மன்னா!’’"





###########################




" ‘’ புற வழிச்சாலையின்னு அறிவிப்பு பலகை இருந்தத மாற்றி புறமுதுகுச்சாலையின்னு எழுதியிருக்கிறாங்களே! ஏன்?’’

’’ வழக்கமா மன்னர் இந்த வழியாத்தான் புறமுதுகிட்டு ஓடி வருவாராம்!’’"





###########################




"‘’ இருமலுக்கு டாக்டர் ஊசி போட்டப்போ லொக்கு லொக்குன்னு இருமுன தாத்தா நர்ஸ் நமீதா ஊசி போட்டதும் வேற மாதிரி இருமுறாரு!’’

‘’ எப்பிடி?’’

‘’ லக்கு லக்குன்னு இருமுறாரு”"





###########################




" நன்றி:- இடை வெளிகள்

நன்றி:- ஐ.பு. பால்ராசய்யா"





###########################




" ‘‘உங்களுக்கு ஓண்ணுமே தெரியாதுனு முத்துசாமி சொல்றாரே…’’

‘‘அவரை யாருன்னே எனக்குத் தெரியாது…!’’"





###########################




"‘‘கோயிலுக்குப் போய் வந்த பிறகு வெங்கடாசலம் தன் பெயரை ‘வெங்சலம்’னு மாத்திக்கிட்டானா…. ஏன்?’’

கோயில்லே ‘கடா’வை வெட்டிட்டானாம்…!’’"





###########################




" ‘‘Tக்கு அப்புறம் என்ன வரும்?’’

‘‘டீ குடிச்சதுக்கான பில் வரும்’’"