கணவன் : குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா .. .. ?

மனைவி : இல்லே .. .. அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார் .. .. "





###########################




"ஏஜமானி : இருபத்தநாலு மணி நேர நியூஸ் சானல் வரப்போகுதாம் .. ..

வேலைக்காரி : அதுக்காக என்னை வேலையை விட்டு நீக்கிவிடாதீங்கம்மா "





###########################




"நண்பர் 1 : போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு .. .. ?

நண்பர் 2 : அதுக்கென்ன .. .. ?

நண்பர் 1 : குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்கப் பணம் கட்டுவென்னு ஒரே தகராறு பண்றாரு .. .. "





###########################




"கணவன் : நம்ம வீட்டுக்கு சாப்பிட ஏங்க மானேஜரை கூப்பிட்டிருக்கிறேன்.

மனைவி : என்ன திடீர்னு ?

கணவன் : அவர் மனைவியோட சாப்பாட்டை கொஞ்ச நாளா குறை சொல்லிக்கிட்டிருந்தாராம் அதான். "





###########################




"காவல் அதிகாரி : உங்களை அரெஸ்ட் பண்றேன்,,, வாங்க ஆஸ்பத்திரிக்கு ,,

அரசியல்வாதி : எதுக்கு ?

காவல் அதிகாரி : எப்பவும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீர்,, அதான். "





###########################




"பாபு : நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போறாங்களாமே...

வேலு : நிஜமாவா?

பாபு : ஆமாம்... குல்லா போடாம எல்லோருடைய பணத்தையும் வட்டியோட திருப்பித் தர்றாரே.. சும்மாவா"





###########################




"வேலு : நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர் கூட நனையவில்லை.

ரமனன் : அதெப்படி?

வேலு : மழையே பெய்யவில்லையே!"





###########################




"நண்பர் 1 : டி.வி-க்கு கொடுக்கணும்ங்கற எண்ணத்துலயே அந்த டைரக்டர் சினிமா படம் எடுக்கறாரு போலிருக்கு...

நண்பர் 2 : எப்படி சொல்றீங்க..?

நண்பர் 1 : படத்து நடுநடுவிலே நிறைய விளம்பரப் படமும் எடுத்திருக்காரே"





###########################




"முட்டாள் 1 : ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?

முட்டாள் 2 : பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்."





###########################




"ரானி : சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு..

வேனி : ஏன்?

ரானி : படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு.."





###########################




"பாபு : இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?

கோபு : நான்கு!

பாபு : இல்லை / 22."





###########################




"ஒருவர் : டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது

மற்றொருவர் : டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?"





###########################




"ரமனன் : என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.

முராரி : அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?

ரமனன் : இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.

"





###########################




"மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?

கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?"





###########################




"பாக்கி : 22 - ம் நம்பர் பஸ் எங்கே வரும்?

வேலு : ரோட்ல தான்!"





###########################




"நண்பர் 1 : என்ன சார்... உங்க பையன் அவனோட தாத்தா மேல ஏறிப் படுத்துகிட்டு இருக்கான்...?

நண்பர் 2 : நான்தான் சொன்னேனே.. எங்கப்பா படுத்த படுக்கையா ஆகிட்டாருன்னு.."





###########################




"ரமனன் : பால் வியாபாரம் செய்கிறீர்களே! கட்டுபடியாகிறதா?

முராரி : மாட்டின் சொந்தக்காரர்கள் கண்களில் அகப்பட்டுக் கொள்ளாதவரை பரவாயில்லை."





###########################




"முட்டாள் 1 : என்னங்க... செருப்பு காலை கடிக்குது

முட்டாள் 2 : அப்ப மாலைல போட்டுக்கங்க"





###########################




"ரமனன் : தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது. இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

பாக்கி : இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்."





###########################




"ஒருவர் : சார்... ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே... என்ன ஆச்சு?

அதிகாரி : டபுள் ஆகும்னுதானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே"





###########################




"ரானி : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?

வேனி : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே"





###########################




"வேனி : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?

ரானி : எதுக்கு?

வேனி : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு"





###########################




"பஸ்ஸ’ல் ஒருவன், இன்னொருவன் தோளைத் தட்டி:

ஒருவர் : இது இராயப்போட்டையா?

மற்றொருவர் : இல்லை தோள்பட்டை."





###########################




"மாணவன் 1 : வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது?

மாணவன் 2 : எப்படிடா சொல்றே?

மாணவன் 1 : திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க"





###########################




"கோபு : டேய் பாபு எனக்கு லைப்பே ஒரு பிடிப்பு இல்லே தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுதுடா

பாபு : அட அசடு அதுக்காகத் தற்கொலை பண்ணிக்காதே. கல்யாணம் பண்ணிக்கோ. அது போதும்."





###########################




"வேலு : அதான் டி.வி-யில் நியூஸ் போடுறானேன்னு நியூஸ் பேப்பரை நிறுத்தினது தப்பாபோச்சு..

பாக்கி : ஏன்... என்னாச்சு?

வேலு : இப்பப் பாருங்க.. ஓசி பேப்பர் வாங்க வரும் பக்கத்து வீட்டுக்காரரு, கொஞ்சம் டி.வி இருந்தாக் கொடுங்க.. நியூஸ் பார்த்துட்டு தர்றேன்னு சொல்றாரு"





###########################




"பாக்கி : உன் வயது பதினெட்டுதானே

ரமனன் : எப்படி கரெக்டா கண்டுபிடிச்சே

பாக்கி : ஓர் அரை லூசின் வயது ஒன்பது"





###########################




"சித்ரா : ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?

கோபு : சரி சித்ரா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?"





###########################




"ஆசிரியர் : பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா? இல்ல சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைச் சுத்துமா?

மாணவன் : எனக்குத் தலையைச் சுத்துது சார்."





###########################




"ஒருவர் : நீங்க இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை

மற்றொருவர் : நானும் அப்படித்தான் இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை"





###########################




"முட்டாள் 1 : சார்... என் பேரு கந்தசாமி.... சொந்த ஊரு பழனி...

முட்டாள் 2 : அதுக்கென்ன இப்போ..

முட்டாள் 1 : ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே.. அதான் அறிமுகப் படுத்திக்கிட்டேன்."





###########################




"வக்கீல் : கொலை எங்கே நடந்தது?

சாட்சி : திருப்பதியிலே சார்.

வக்கீல் : இப்படி மொட்டையா சொன்னா எப்படி?"





###########################




"கோபு : அந்த ஆள் ரொம்ப சிக்கனப் பேர்வழி... எப்ப மார்க்கெட்டுக்குப் போனாலும் வாழைப்பழம்தான் வாங்குவாரு..

பாபு : ஏன்...

கோபு : அதான் சீப்பா கிடைக்குதாம்"





###########################




"பெரியசாமி : எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.

சின்னசாமி : ஓ! அதுதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா?"





###########################




"ரமேஷ் : எத்தனை பெரிய ஆபத்து வந்தாலும் யானை, குதிரை எல்லாம் கத்தாது.

சுரேஷ் : ஏன்?

ரமேஷ் : யானை பிளிறும்! குதிரை கனைக்குமே!"





###########################




"ஒருவர் : திருநெல்வேலி வரன் ஒண்ணு ஒங்க பொண்ணுக்கு வந்ததே என்ன ஆச்சி ?

மற்றொருவர் : கடைசி நேரத்திலே அல்வா கொடுத்துட்டாங்க"





###########################




"ரமனன் : பாப்பா, இந்த டிரஸ் தீபாவளிக்கு எடுத்ததா..?

பாப்பா : இல்ல, எனக்கு எடுத்தது..என்ன..,"





###########################




"பாலு : படகுல ஏறி பார்க்கலாமா?

வேலு : முடியாதே! ஏரியிலதான் படகைப் பார்க்கலாம். "





###########################




"ஒருவர் : அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது

மற்றொருவர் : ஏன் ?

ஒருவர் : எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு"





###########################




"ஆசிரியர் : எங்கே ஆங்கில எழுத்துகளை வரிசையாய் சொல்லு.

மாணவன் : பி, சி, டி, இ, எப்,....

ஆசிரியர் : டேய்! ஏன் முதல் எழுத்து ஏ-ஐ விட்டுட்டே.

மாணவன் : அது வயது வந்தவங்களுக்கு மட்டும் தான் சார்."





###########################




"கோபு : இந்த ஸ்பிரே வாசம் பிணத்துக்கு அடிக்கிறமாதிரி இருக்குது..?

பாபு : அது 'பாடி ஸ்பிரே' அப்படிதான் இருக்கும்.."





###########################




"நண்பர் 1 : மொழிப் பிரசினையால என் மகன் ஜெயிலுக்குப் போயிட்டான்.

நண்பர் 2 : மொழிப் போராட்டமா ?

நண்பர் 1 : தேன்மொழியைக் கெடுத்துட்டான்."





###########################




"அப்பு : டேய்! நான் காட்டுல சிங்கத்தைப் பார்த்தேன். அது மேலே எச்சில் துப்பினேன். பயந்து ஓடிப் போயிடுச்சு.

சுப்பு : அட நானும் காட்டில சிங்கத்தைப் பார்த்தேன். அதோட முதுகுல தடவினப்ப ஈரமா இருந்துச்சு. அது நீ செஞ்ச வேலைதானா?"





###########################




"முட்டாள் கோபு : நேரு ரொம்ப மோசமான ஆளு..எப்படி சொல்றீங்க..?

முட்டாள் பாபு : அவர்தான் ரோஜாவை 'வச்சி'ருக்காறே.."





###########################




"நீதிபதி : எதிர்க்கட்சி வக்கீல் கேட்கும் கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு.

குற்றவாளி : முடியாதுங்க என் வக்கீல்கிட்ட மட்டும்தான் பேசுவேன்"





###########################




"டாக்டர் : நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி போடணும்.

நோயாளி : முடியாது டாக்டர். நாய் ஓடிப் போயிடுச்சு."





###########################




"ரமனன் : சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா ?

சர்வர் : ஏன் அக்கறையா கேட்கறீங்க ?

ரமனன் : எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது."





###########################




"பாபு : டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை ?

டாக்டர் : அப்போ...., ஆபரேஷன் முடிஞ்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?"





###########################




"அரசன் : புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?

புலவர் : மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!"





###########################




"நீதிபதி : ""ஏம்ப்பா ரெண்டு காலும் நொண்டியா இருக்கும்போதே இவ்வளவு திருட்டு வேல செஞ்சிருக்கயே இன்னும் கை காலல்லாம் நல்லா இருந்தா என்ன செஞ்சிருப்ப?""

திருடன் : ""இப்டி அனாவசியமா மாட்டிட்டுருக்க மாட்டேங்க."""





###########################




"வக்கீல் : மை லார்ட் . . . என் கட்சிக்காரர் ஒரு நல்ல மனிதர் நேர்மையானவர் யாரிடமும் கொடூரமாக நடந்து கொள்வதை அவர் வெறுப்பவர் எல்லோரிடமும் அன்பு செலுத்துவதில் என் கட்சிக்காரர் சிறந்தவர்.

கட்சிக்காரர் : (சத்தமாக) யோவ் வக்கீல் . . . என்ன விளையாடறியா? காசு வாங்கிக்கிட்டு என்னைப் பத்தி சொல்லுய்யான்னா . . . வேற யாரைப் பத்தியோ சொல்லிக்கிட்டு இருக்கியே . . . தொலைச்சிடுவேன் தொலைச்சி . . ."





###########################




"கோபு : டாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.

பாபு : அப்புறம் ?

கோபு : அஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப் புள்ளி வெச்சிட்டேன்"





###########################




"நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட ""ஈ""ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?

குற்றவாளி : என் ""சொத்தை""யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்."





###########################




"ஒருவர் : உங்களுடன் சீட்டுக்குச் சேரும் பொடியன் அவ்வளவு நல்லவன் இல்லை. இடையிலே முறிச்சுக்கொண்டு ஊர் மாறி, காலை வாரி விடப் போறான் கவனம்.

மற்றவர் : நானே முதல் சீட்டை சேர்த்துக் கொண்டு நாடு மாறுவதற்கு எல்லா ஆயத்தங்களும் செய்து விட்டேன். நீங்கள் வேறு அது இது என்று சொல்லிக் கொண்டு…ஒருவர் ? ? ?"





###########################




"ரமனன் : ரெண்டு நாளா என் பையனைக் காணோம்

முராரி : அப்படியெல்லாம் சந்தேகமா என்னைப் பார்க்காதீங்க சார். என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா."





###########################




"தொண்டர் : ""தலைவா! உங்க பேரில் விசாரணைக்குக் கமிஷன் வச்சிருக்காங்க""

தலைவர் : ""கமிஷனா"".....வெரி குட்! எவ்வளவு கிடைக்கும்?..."""





###########################




"கோபு : பையன் பட்டாசு கேட்டா அதுக்கு ஏன் அவனை இப்படி போட்டு அடிக்கிறீங்க?

பாபு : கார் குண்டுதான் வேணும்னு அடம் பிடிக்கிறான் ராஸ்கல்."





###########################




"மகன் : அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன்

தந்தை : அப்படியா..... மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்."





###########################




"ஒருவர் : நம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு

மற்றொருவர் : லாட்டரி ஏதாவது விழுந்ததா ?

ஒருவர் : நீங்க வேற நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியா சண்டை. கடைசில அவ அடிச்சுட்டா என் கன்னம் வீங்கிப் போச்சு"





###########################




"கோபு : ""கிணத்துல விழுந்த குழந்தையைக் கஷ்டப்பட்டு மேலே தூக்கின நீ, எதுக்குடா மறுபடியும் கிணத்துலயே போட்டே?""

பாபு : எடுத்ததை எடுத்த இடத்துல வைக்கணும்னு எங்க அப்பா சொன்னது நினைவுக்கு வந்துடிச்சே....!"





###########################




"ரமனன் : சார், உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும் வீட்டுக்கு வரலாமா ?

முராரி : ஐயய்யோ, வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணா தீங்க ஆபீசுக்கே வந்துடுங்க ஒரு மணி என்ன, ரெண்டு மணி நேரம்கூட பேசலாம்"





###########################




"தொண்டர் 1 : ""தலைவர் எல்லாப் பதவியையும் தானே அனுபவிக்கணும்னு ஆசைப்படுவார்""

தொண்டர் 2 : ""அதுக்காக பொம்பளை வேஷம் போட்டுக்கிட்டு மகளிர் பகுதி செயலாளரா அவரே இருக்கிறததெல்லாம் கொஞ்சம் ஓவர்!"""





###########################




"ரமனன் : எதிர்த்த வீட்டு பொண்ணு ஓடிப்போயிடுச்சே அதுக்கப்புறம் என்ன மாமி ஆச்சு?

மாமி : இதுக்கு மேல விவரங்கள் வேணும்னா மாமி.காம் ஓபன் பண்ணி பார்த்துக்கோடீம்மா."





###########################




"ரமனன் : ""வேலு பறவையிலேயே எந்தப் பறவை நல்லாப் பாடும் சொல்லு?""

வேலு : ""பரவை முனியம்மா, சார்"""





###########################




"அமைச்சர் : அரசே, இவர்களிருவரும் உங்களை கோழை என்றும், புறமுதுகு காட்டுபவர் என்றும் வீதியில் பேசிய வாறு இருந்தனர்

அரசர் : ராஜ ரகசியத்தை வெளியிட்ட இவர்களை பாசறையில் அடை"





###########################




"ஒருவர் : மாப்பிள்ளை ஏன் புரோகிதர் தாலி கட்டச் சொல்லியும் கட்டாம கல்யாண கூட்டத்துல யாரோ ஒருவர் விசில் அடிச்சதும் தாலி கட்டினாரே ஏன் ?

மற்றொருவர் : அதுவா மாப்பிள்ளைதான் பஸ் டிரைவர் ஆச்சே"





###########################




"கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி : நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே."





###########################




ஒருவர் : போன படத்துல ஹீரோ கோயில் தூணைப் புடுங்கி அடிக்கிற மாதிரி காட்டினீங்க ஏதோ மக்கள் ஏத்துக் கிட்டாங்க அதுக்காக இந்தப் படத்துல கோயிலையே புடுங்கி அடிக்கறது ஒவர் சார்





###########################




"தொண்டர் 1 : தலைவர் எங்க நிக்கவச்சாலும் நான் நிப்பேன்னு பெருமையா பேசினது தப்பா போச்சு.

தொண்டர் 2 : ஏன் என்னாச்சு?

தொண்டர் 1 : வீட்டுக்கு வாசல்ல செக்யூரிட்டியா நிக்க வச்சுட்டாரு."





###########################




"நண்பர் 1 : அந்த அம்பயர் ஏன் நடுவில் நிக்காம ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்?

நண்பர் 2 : அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாங்களாம். "





###########################




"மாப்பிளை : மாமா, உங்க வீட்டோட மாப்பிள்ளையா வர எனக்கு தன்மானம் இடம் கொடுக்காது.

மாமா : சரி, என்ன செய்யலாம் ?

மாப்பிளை : உங்க வீட்டை விற்று பணத்தை என்கிட்டே குடுத்துடுங்க. அந்தப் பணத்துல வேற வீடு வாங்கிக் குடி போயிடலாம்."





###########################




"மாப்பிளை : மாமா, உங்க வீட்டோட மாப்பிள்ளையா வர எனக்கு தன்மானம் இடம் கொடுக்காது.

மாமா : சரி, என்ன செய்யலாம் ?

தொண்டர் 1 : ""தலைவர் எதுக்கு அனாவசியமா சலூன் போகும் போதெல்லாம் தொண்டர்களையும் கூட்டிட்டுப் போறார்""

தொண்டர் 2 : ""முடி வெட்டறதுக்கு முன்னால துண்டு போத்துவாங்கல்ல அப்ப கை தட்டறதுக்காக இருக்கும்."""





###########################




"கோபு : முரளிதரன் தூரா பந்து போட ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சார் அம்பயர்க்கெல்லாம் குளிர்விட்டுப் போயிடிச்சு . . .

பாபு : எப்படி?

கோபு : 2 விரலை தூக்கிட்டு 2 பேட்ஸ்மேனும் அவுட் இது ஒரு மேஜிக் அப்படீன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க."





###########################




"நிருபர் : ஆளுங்கட்சி எதிர்க்கட்சி 2க்கும் பொதுவான விஷயம் ஒண்ணு இருக்குன்னு அன்னிக்கு மீட்டிங்கில பேசறீங்களே அது என்ன?

அரசியல்வாதி : மக்களோட பணந்தான்."





###########################




"ரமனன் : ""சட்டை பொத்தான் போடறதையே 2 வாரமா காமிச்ச மெகா சீரியல் டைரக்டரோட அடுத்த சீரியல் விறுவிறுப்பா இருக்குமாம்""

வேலு : ""எப்படி?""

ரமனன் : பொத்தானுக்கு பதிலா ""ஜிப்"" வச்சுட்டாராம்."





###########################




"ஒருவர் : எங்கே, இந்தக் கைதியை விசாரணை பண்ணுங்க பார்க்கலாம்.

மற்றொருவர் : டேய்,,,, பாக்கெட்ல எவ்வளவு பணம் வெச்சிருக்கே ?"





###########################




"நீதிபதி : பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?

குற்றவாளி : உங்களை மாதிரிதாங்க எல்லோரும் எமாந்துடறாங்க."





###########################




"ஒருவர் : இந்தியாவுக்கு ஹாட்ரிக்னா என்ன அர்த்தம் சொல்லு?

மற்றொருவர் : பந்துல 3 ரன் எடுக்கறதுதான்"





###########################




"ஒருவர் : சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.

மற்றொருவர் : எப்படிச் சொல்றீங்க ?

ஒருவர் : ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்."





###########################




"திருடன் : என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.

நீதிபதி : எப்படி ?

திருடன் : ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க."





###########################




"நண்பர் 1 : தீபாவளிக்கு ரிலீசாகற படங்கறதால இந்த மாதிரி சீன் வைக்கிறது கொஞ்சம் ஓவர்.

நண்பர் 2 : என்ன சீன்?

நண்பர் 1 : ஹீரோயின் தொப்புள்ல சங்குச் சக்கரம் விடறமாதிரி!"





###########################




"வேலு : ""விசிடி கடையெல்லாம் மூடினதால நம்ம டைரக்டர் கை ஒடிஞ்ச மாதிரி ஆயிட்டார்""

ரமனன் : ""ஏன் இவங்கதானே திருட்டு வி.சி.டி.ய ஒழிக்கனும்னு குதிச்சாங்க?""

வேலு : ""தமிழ் சிடிக்கள மட்டும்தான் சொன்னாங்க இங்கிலீஷையும் ஒழிச்சுட்டா எதப்பாத்து இவர் படம் எடுக்க முடியும்"""





###########################




"கோபு : தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும்

பாபு : ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?"





###########################




"நண்பர் 1 : நீங்க இதுவரைக்கும் எவ்வளவு கவிதை எழுதியிருப்பீங்க?

நண்பர் 2 : சரியா சொல்லனும்னா 10 கிலோ 300 கிராம்."





###########################




"ரானி : தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?

வேனி : தெரியலையே .. .. என்னது ?

ரானி : தலையிலே முடி இருக்கறதுதான் .. .."





###########################




"டாக்டர் : உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?

நோயாளியின் மனைவி : எப்படி சொல்றீங்க?

டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே! 

டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே! "





###########################




"ஒருவர் : டாக்டர் எழுதிக் கொடுத்ததுல மேல உள்ள மருந்து மட்டும் இல்ல.

மற்றொருவர் : மேல உள்ளது மருந்து இல்ல என்னோட பேரு."





###########################




"பாபு : அவர் ஏன் காரை ரிவர்ஸ்லயே ஓட்டிட்டு போறார்.

கோபு : காரை விக்கும் போது கி.மீ. குறைவா காண்பிக்கணுமாம்."





###########################




"ரமனன் : என்னப்பா இது எலக்ட்ரிக் ட்ரெயின் டிரைவர போய் ஈவ் டீசிங் கேஸ்ல புடிச்சுட்டு வந்திருக்கீங்க?

வேலு : லைன்ல நடந்து போய்ட்டு இருந்த காலேஜ் பொண்ணு மேல ட்ரயினால மோதிட்டாராம்."





###########################




"பாக்கி : டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு!

டாக்டர் : நீங்க சொல்லவே வேண்டாம் எங்கிட்ட நீங்க வந்ததவச்சே புரிஞ்சுக்க முடியும்."





###########################




"நண்பர் 1 : இதோ தர்றேன் அவசரப்படாதீங்க எல்லாருக்கும் உண்டு அப்டீன்னு 100, 200ன்னு ரூபாய அள்ளி வீசுறாரே அவர் என்ன பெரிய கோடீஸ்வரரா?

நண்பர் 2 : நீ வேற வாங்கின கடனை திருப்பி வாங்க சம்பளத்தன்னிக்கி ஆபிஸ்க்கே கடன்காரங்க வந்திருக்காங்க."





###########################




"ஒருவர் : அந்த சலூன் கடைக்காரரை ஏன் கைது செஞ்சாங்க?

மற்றொருவர் : ""தலை சீவிட்டாராம்"""





###########################




"கோபு : 20 வருஷத்துக்கு முன்னாடி நீங்க எழுதின கதையப் படிச்சதும் நீங்களா இப்டி எழுதியிருக்கீங்கன்னு ஆச்சரியமா இருந்தது.

பாபு : உங்களுக்காவது ஆச்சரியம் எனக்கு சந்தேகமா இருந்தது."





###########################




"ரமனன் : என்னது நம்ம பத்திரிகை ஆபீஸ்லேந்து திருடிட்டு போனவன் திருப்பி பார்சல் அனுப்பியிருக்கானா?

பாபு : அதை ஏன் கேக்கறீங்க? பத்திரிகைக்கு வந்த கதையெல்லாம் படுகண்றாவியா இருக்குன்னு திருப்பி அனுப்சுட்டான் சண்டாளன்."





###########################




"மனநல ஆசிரியர் : ""தம்பி அங்க பாரு பசங்களெல்லாம் பந்த எடுத்துட்டு அங்கயும் இங்கயும் ஓடி விளையாடறாங்க நீ மட்டும் இப்டி தனியா ஒரே இடத்துல நிக்கலாமா சொல்லு.""

மாணவன் : ""அய்யோ! நான் தான் கோல் கீப்பர் சார்."""





###########################




"நண்பர் 1 : சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?

நண்பர் 2 : கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்"





###########################




"கோபு : ஓட்டப்பந்தயத்துல தங்க மெடல் வாங்கினா ""ஊக்க மருந்து""ன்னு சொல்லி தடை செஞ்சிடுறாங்க. சரி கடைசில வந்தவங்களையும் ஏன் செக் பண்றாங்க?

பாபு : இவங்க ஏதாவது ""தூக்க மருந்து"" சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்."





###########################




"நண்பர் 1 : பரவாயில்லையே நாங்க எவ்வளவு அடிச்சும் உங்க பையனுக்கு ""ழ"" வரவே இல்லை. இன்னிக்கு கரெக்டா சொல்றானே. என்ன செஞ்சீங்க?

நண்பர் 2 : நீங்க எவ்வளவு அடிச்சும் வராத ""ழ"" அவன் தண்ணியடிச்சதும் தானா வந்துடுச்சு."





###########################




"ஒருவர் : லோகோ எதுவும் சட்டைல போடக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தெரியுமில்ல?

மற்றொருவர் : டிரிங்க்ஸ் குடிக்கறப்ப ஜூஸ் சிந்திடுச்சி சார்!"





###########################




"கணவன் : ""வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல""

மனைவி : ""தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே."""





###########################




"மகன் : அப்பா பைத்தியம்னா என்னப்பா?

தந்தை : சம்பந்தா சம்பந்தமில்லாம நீளமா எதையாவது உளறிகிட்டே இருப்பாங்க பேசறது எதுவுமே புரியாது என்ன புரிஞ்சுதா?

மகன் : சுத்தமா புரியலையேப்பா . . ."





###########################




"ஆசிரியர் : துரியோதனன் தன்னோட உயிர தொடைலதான் வச்சுண்டுருந்தானாம்.

மாணவன் : இதென்ன சார் பெரிய விஷயம் நம்ம கிளா ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான். "





###########################




"அப்பா : டேய் உலகத்துலயே காசுதாண்டா முக்கியம் காசு இல்லன்னா எதையுமே வாங்க முடியாதுடா.

மகன் : ஏன் கடன் வாங்கலாமே . . ."





###########################




"நண்பர் 1 : ""பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை ஆனாலும் தள்ளி வச்சுகிட்டே போறாங்க?""

நண்பர் 2 : ""ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த முடிக்கணும்னு பெரியவங்க சொன்னத சீரியசா எடுத்துகிட்டாங்க. அதனால இன்னும் 300 பொய் சொன்னப் பிறகு தான் கல்யாணமாம்."





###########################




"போலிஸ் : டெய்லி போலிஸ் ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?

திருடன் : கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல திருடப் போலாங்களா ஐயா?"





###########################




"நோயாளி : ""டாக்டர் மயக்க ஊசி போடாம ஆபரேஷன் செய்றீங்க. எனக்கு பயங்கரமா வலிக்குது.""

டாக்டர் : கொஞ்சம் பொறுத்துக்குங்க. கொஞ்ச நேரத்துலதான் ""எல்லாமே"" முடிஞ்சுடுமே."""





###########################




"நீதிபதி : ஏன் இப்படி கைதிகளை முதுகு வளைஞ்ச நிலைலே கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர்றீங்க இப்படியா ட்ரீட் பண்றது?

போலிஸ் : நாங்க மடக்கி பிடிச்சதுல இது மாதிரியாயிடுச்சு சார்."





###########################




"நீதிபதி : கள்ள நோட்டு அடிக்கறதே குற்றம் . . . இதுல என்ன திமிர் இருந்தா 1000 ரூபாய் நோட்டை தலைகீழா அடிப்பே . . .

குற்றவாளி : என்ன செய்யறது எஜமான் . . . தண்ணியடிச்சிட்டு நோட்டு அடிச்சதால தவறுதலா ""0001""ன்னு அடிச்சிட்டோம் . . ."





###########################




"மனைவி : ""ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க.""

கணவன் : ""இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."""





###########################




"வேலு : யாரது டெய்லி ராத்திரி 2 மணிக்கு வந்து உங்கள கூட்டிட்டு போறது?

ரமனன் : என் பிரண்டுதான். அவனுக்கும் தூக்கத்துல நடக்கிற வியாதி. எனக்கும் அதே வியாதி. அதனால நான் தான் ஒரு கம்பெனிக்காக வந்து எழுப்பச் சொல்லியிருக்கேன். "