ராமு : எல்லாப் பொண்ணுங்களையும் கூடப் பொறந்த சகோதரியா பாக்குறேன்டா

சோமு : உன் பார்வையப் பார்த்தால் அப்படித் தெரியலியே.....

ராமு : உன் கூடப் பிறந்த சகோதரியா நினச்சுப் பாக்குறேன்டா - மச்சி. "





###########################




"ராமு : நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

சோமு : ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க "





###########################




"ராமு : கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?

சோமு : புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான்.

ராமு : பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா. "





###########################




"ராமு : நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...

சோமு : வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது."





###########################




"ராமு : ""அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறார்""

சோமு : ""எதுக்கு?""

ராமு : ""ஆபரேசன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுதப் போறாராம்"". "





###########################




"ராமு : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என் வீடு ?

சோமு : ம் .. .. .. உங்க வீடா ? "





###########################




"சோமு : நான் தினமும் ரத்தம் குடுக்கிறேன்.

ராமு : அப்படியா ! எங்க வேலை பாக்குறீங்க?

சோமு : ""கசாப்புக் கடையில!!"" "





###########################




"ராமு : தீபாவாளி முடிஞ்சு ஒரு மாசமாச்சு. இப்ப உங்க வீட்டுக் கொல்லையில் வெடிச்சத்தம் கேக்குதே?

சோமு : தீபாவாளிக்கு பத்த வச்சதுதான். இப்பதான் திரிபுடிச்சு வெடிக்குது. "





###########################




"ராமு : டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ?

சோமு : தை. "





###########################




"ராமு : பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

சோமு : என்னாச்சு?

ராமு : பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே "





###########################




"ராமு : சுருட்டு கம்பெனி கேஷியர் சுகுமாரன் எங்கே ?

சோமு : அவர், பணத்தை சுருட்டிட்டு ஒடிட்டார் "





###########################




"ராமு : அவரு வியாபாரத்துல படிப்படியா உயர்ந்தவர்

சோமு : எப்படி?

ராமு : முதல்ல செருப்பு வியாபாரம் பண்ணி, அப்புறம் பெல்ட் வியாபாரம் செஞ்சாரு. இப்ப தொப்பி வியாபாரம் பண்றாரு. "





###########################




"ராமு : குடி குடியை கெடுக்கும்ங்றது சரியா போச்சு

சோமு : எப்படி?

ராமு : எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா.. "





###########################




"ராமு : பேங்க் மேனேஜர் பின்னால ஒருத்தர் அலைஞ்சா எப்படி அலைவாரு?

சோமு : லோன் லோன்-னுதான் "





###########################




"சோமு : அந்த பட்டாசுக்கடைக்காரர் இதற்கு முன்னால் பூக்கடை வைத்திருந்தார் போல் தெரிகிறது ,,,,,,

ராமு : எப்படி சொல்றே ,,,,, ?

சோமு : சரவெடி கொடுங்கன்னா ,,, எத்தனை முழம்னு கேட்கிறாரே "





###########################




"ராமு : என்ன இது .. .. ஷூட்டிங் பார்க்க இவ்வளவு வி.ஐ.பி-க்களா .. .. ?

சோமு : அவங்கள்லாம் சென்ஸார் போர்டு மெம்பருங்க .. ..ஒவ்வொரு ஸீன் எடுக்கறதக்கு முன்னாடி அவங்க அபிப்பிராயத்தைக் கேட்டுக்கிட்டு எடுக்கறாங்க .. .. "





###########################




"சோமு : அந்தப் புதுப்படம் ஆறு மணி நேரம் ஒடுதா .. .. ஏன் ?

ராமு : அதுவா .. .. டைரக்டர் ஒவ்வொரு நடிகரா போய் கதை சொன்னது, தயாரிப்பாளரைப் பிடிச்சது, அப்புறம் ஸ்டோரி டிஸ்கஷன் எல்லாத்தையும் காட்டறாங்களாம் .. .. "





###########################




"ராமு : நீ சினிமா டைரக்டராவதற்கு முன்னே, ஊர்லே ரைஸ் மில் வெச்சு இருந்தது பத்திரிகைக்காரங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு போலிருக்கு

சோமு : இப்ப என்ன ஆச்சு .. .. ?

ராமு : எப்பவுமே அரைச்சமாவையே அரைச்சுண்டு இருக்கார்னு விமர்சனம் எழுதறhங்களே "





###########################




"ராமு : என்னங்க .. .. உங்க படத்துல ஸீனுக்கு ஸீன் அடிதடியா இருக்கே ?

சோமு : பின்னே என்னங்க .. .. பத்தாயிரம் அடில எடுத்த படம்னு நாங்கதான் தெளிவா சொல்லிட்டோமே "





###########################




"ராமு : யோசனையே இல்லாம மெகா சீரியல் மாதிரி படம் எடுத்துட்டோம்

சோமு : அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..?

ராமு : பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்.. "





###########################




"சோமு : அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்

ராமு : எப்படிச் சொல்றே?

சோமு : நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு "





###########################




"ராமு : என்ன இது .. .. கதாநாயகி, நடிகையைப் போய், எக்ஸ்ட்ரானு சொல்றே ?

சோமு : ஊஹும் .. .. ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் வெச்சுதானே மேக்கப் போட்டுக்கறா .. .. ?"





###########################




"ராமு : பல மொழிகள்ல இருந்து குரூப் டான்ஸர்களை வரவழைச்சு இருக்கீங்களே .. .. நடனத்துக்கு நடனம் வித்தியாசம் காட்டவா ?

சோமு : ஊஹும் .. .. தொப்புளுக்குத் தொப்புள் வித்தியாசம் காட்டத்தான் "





###########################




"ராமு : எதுக்கு நீங்க சாப்பாட்டுல கோந்தைக் கலந்துக்கறீங்க .. .. ?

சோமு : அப்பதான் சார், சாப்பாடு உடம்புல ஒட்டுது "





###########################




"ராமு : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்கிறது சரியாப் போச்சா... எப்படி ?

சோமு : காலையில் மனைவியைத் திட்டினேன், சாயங்காலம் பின்னிட்டா "





###########################




" Bookmark and Share   [நண்பருக்கு அனுப்பு (Send Friend)] நண்பருக்கு அனுப்பு [பிரதி எடு (Print)] பிரதி எடு

 

 

ராமு-சோமு சிரிப்புகள் - ராமு-சோமு சிரிப்புகள் 4

 

 

 

 

 

 

ராமு : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்கிறது சரியாப் போச்சா... எப்படி ?

சோமு : காலையில் மனைவியைத் திட்டினேன், சாயங்காலம் பின்னிட்டா

 

ராமு : வளவளன்னு பேசாம, சுருக்கமா ஒரே வார்த்தையிலே புரியும்படி சொல்லு.

சோமு : செலவுக்கு 1000 ரூபாய் கடன் வேணும்

 

ராமு : என்னது... திருவோடு ஃபிலிம்ஸா ?

சோமு : ஆமாம், நாலைஞ்சு பிச்சைக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜெட்ல படம் எடுக்கிறாங்க

 

சோமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?

ராமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே..

 

ராமு : அவர் பல் டாக்டரா ?

சோமு : எப்படித் தெரிஞ்சது ?

ராமு : பல்லாண்டு வாழ்க-னு வாழ்த்தறதுக்குப் பதிலா , பல் ஆடி - வாழ்கனு சொல்றாரே

 

ராமு : அவன் சோழர் பரம்பரை, துணிக்கடை வெச்சிருக்கானா... அவன் பெயர் ?

சோமு : குளோத் (ஊடடிவா) துங்க சோழன்

 

ராமு : கொடுத்த கடன் என்னாச்சு ? எனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தியாயிட்டே வருது,,,,,,

சோமு : அப்ப இன்னும் கொஞ்ச நாள் பொறுங்களேன் ,,,,

ராமு : எவ்வளவு நாள் ,,,,?

சோமு : உங்களுக்கு முழுசா மறதி ஏற்படற வரைக்கும்.

 

ராமு : நான் மேலே படிக்கப் போறேன்

சோமு : May-லேதான் விடுமுறை ஆச்சே

 

 

 

 

 

 

 

 

‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

 

    ராமு-சோமு சிரிப்புகள் 4 - Ramu-Somu Jokes - ராமு-சோமு சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை - 

 

பின்புறம் |  முகப்பு  |  மேற்புறம்"





###########################




"ராமு : என்னது... திருவோடு ஃபிலிம்ஸா ?

சோமு : ஆமாம், நாலைஞ்சு பிச்சைக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜெட்ல படம் எடுக்கிறாங்க "





###########################




"சோமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?

ராமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே.."





###########################




"ராமு : அவர் பல் டாக்டரா ?

சோமு : எப்படித் தெரிஞ்சது ?

ராமு : பல்லாண்டு வாழ்க-னு வாழ்த்தறதுக்குப் பதிலா , பல் ஆடி - வாழ்கனு சொல்றாரே "





###########################




"ராமு : அவன் சோழர் பரம்பரை, துணிக்கடை வெச்சிருக்கானா... அவன் பெயர் ?

சோமு : குளோத் (ஊடடிவா) துங்க சோழன் "





###########################




"ராமு : கொடுத்த கடன் என்னாச்சு ? எனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தியாயிட்டே வருது,,,,,,

சோமு : அப்ப இன்னும் கொஞ்ச நாள் பொறுங்களேன் ,,,,

ராமு : எவ்வளவு நாள் ,,,,?

சோமு : உங்களுக்கு முழுசா மறதி ஏற்படற வரைக்கும். "





###########################




"ராமு : நான் மேலே படிக்கப் போறேன்

சோமு : May-லேதான் விடுமுறை ஆச்சே "





###########################




"ராமு : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே.. உங்களுக்கு தெரியுமா..?

சோமு : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க... "





###########################




"ராமு : இந்த ஆள் காலடிபடாத இடமே இல்லை இந்தியாவுல...

சோமு : அப்படியா..?

ராமு : ஆமாம்,.. கீழகிடந்த இந்தியா மேப்பை முழுசா மிதிச்சிட்டாரு... "





###########################




"ராமு : இருமல் தாத்தாவை வச்சுப் படம் பண்றீங்களா .. .. ?படம் பேரு என்ன ?

சோமு : ""குட் லொக்"" .. .. "





###########################




"ராமு : 20 வருஷம் முன்னாடி நீங்க எழுதின கதைகளை இப்பப் படிச்சாலும் நீங்களா இப்படி எழுதினீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.

சோமு : உங்களுக்கு ஆச்சரியம் ,,,,, எனக்கு சந்தேகம். "





###########################




"ராமு : சிகை அலங்காரம் செய்ய வந்த பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே... என்னாச்சு ?

சோமு : பின்னி எடுத்துட்டா "





###########################




"சோமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா

ராமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா "





###########################




"ராமு : ஆபீஸில் உன் மேலே குற்றச்சாட்டு எழுந்துள்ளதா ? என்ன ?

சோமு : நான் எழுந்திருக்கிறதே இல்லைன்னு "





###########################




"ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?

சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம். "