என் பையனுக்கு 'செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு! நண்பர்-2: ஏன், என்னாச்சு? நண்பர்-1: எந்த நேரமும் அவளையே 'சுத்திச் சுத்தி' வர்றான்.





###########################




பெண்: டாக்டர், இவர் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார். டாக்டர்: நீங்க ஏன் பார்க்கறீங்க?





###########################




"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?" "ஒன்றும் செய்யக் கூடாது!"





###########################




"அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு.. வேலையை விட்டு தூக்கிட்டாங்க.." "ஏன்?" "அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே.......!"





###########################




"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?" "சம்பளம் கைக்கு வந்ததும்..." "சம்பளம் எப்போ கைக்கு வரும்?" "கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"





###########################




"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?" "இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே" "எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"





###########################




"ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?" "நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..."





###########################




"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?" "அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."





###########################




இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து.... "யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.." "ஏன்..?" "பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"





###########################




" ""பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்"" ""ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு""

""போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?"" ""சத்தம் போடாம வாரும். அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்.."""





###########################




"முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?" "டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!"





###########################




"கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?" "ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"





###########################




"உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?" "அதனால உனக்கென்ன?" "நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே"





###########################




" ""புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?"" ""தெரியலையே.."" ""புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்""

""முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!"" ""எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!"





###########################




"பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.." "சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?"





###########################




"தலைவருக்கு எத்தனை மனைவி?" "சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு!"





###########################




மாலா: எங்க தாத்தாவுக்கு தினமும் கேழ்வரகுக்கூழ், கம்பங்கூழ் இருந்தா போதும் வேற எதுவும் தேவையில்லை. ஹரி: ஓகோ! அப்ப வெறும் 'கூழ்'ட்ரிங்ஸ் தான்னு சொல்லு....





###########################




கலா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா கல்லைப் பொறுக்க முடியாதா? மாலா: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?





###########################




"ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம்,

 

அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம்.

 

அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?"





###########################




"என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும்.

 

என்ன தரட்டும்?

 

ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.

 

வேற எதாவது பெரிசா சொல்லு.

 

ஒரு MRF டயர் வாங்கிக்கொடு."