மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?
கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே!"
###########################
" டாக்டர் : குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கறதுக்கு முன்னாடி நல்லா கொதிக்க வெச்சுக் குடுங்க.
ஜோ : ஏன் டாக்டர், குழந்தைகளை அடுப்பில கொதிக்க வைக்கிறது தப்பில்லையா?"
###########################
" ஜோ : போன வாரம் போலீஸ் என்னை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
நண்பர் : நீ என்ன தப்பு செய்தே?
ஜோ : கடைக்குப் போய் ஷாப்பிங் செய்தேன்.
நண்பர் : ஷாப்பிங் செய்ததுக்கா உன்னை அரெஸ்ட் பண்ணினாங்க?
ஜோ : ஆமா.. ராத்திரி அவங்க கடையை மூடினப்புறம் ஷாப்பிங் போனேன்."
###########################
" காதலன் : “கண்ணே, நம்ப காதலைப் பத்தி யார் கிட்டேயும் சொல்லிடாதே”
காதலி : “மூளையில்லாதவன்கூட உன்னை காதலிக்க மாட்டான்னு சொன்ன ராதாகிட்ட மட்டும் சொல்றேனே!.”"
###########################
" கணவன் : “உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?”
மனைவி : “உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?”"
###########################
" நபர்: என்னுடைய பையனுக்கு வைட்டமின் மாத்திரை ஏதாவது கொடுங்க.
மருந்து கடைக்காரர்: எந்த வைட்டமின் மாத்திரை A, B (அ) C?
நபர்: அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால ஏதாவது ஒரு மாத்திரை கொடுங்க."
###########################
" கடைக்காரர்: நீங்க உடைத்த பொருள் 100 வருஷம் பழையது தெரியுமா?
நபர்: அப்பாடா! நான் அதப் புதுசுனு நெனச்சு பயந்துட்டேன்."
###########################
" முதலாளி: இனி நீ என்னுடைய கார் டிரைவர். உன்னுடைய ஆரம்ப சம்பளம் 3000 ரூபா. உனக்கு சந்தோஷமா?
பப்பு: ரொம்ப சந்தோஷம். வண்டி ஆரம்பிக்க 3000 ரூபா சம்பளம்னு சொன்னீங்க. ஆனா வண்டி ஓட்டறதுக்கு சம்பளம் எவ்வளவு? அத சொல்லலியே?"
###########################
" பப்பு: உன்னுடைய கார் பேர் என்ன?
அப்பு: சரியாக ஞாபகமில்லை. ஆனால் ‘T’ல ஆரம்பிக்கும்.
பப்பு: பரவாயில்லையே.. என்னுடைய கார் பெட்ரோல்லதான் ஆரம்பிக்கும்."
###########################
" பப்பு தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் கை நீட்டி, நிறுத்த சைகை செய்தார். அப்போது,
பப்பு: கொஞ்சமாவது அறிவிருக்கா? ஏற்கெனவே 3 பேர் இருக்கோம். நாலாவதா நீங்க எங்க உக்காருவீங்க?"
###########################
"HOT Re: கணவன்- மனைவி நகைச்சுவை
Post by logu on Tue Apr 30, 2013 9:47 am
கணவன் மனைவி நகைச்சுவைகள்..II
ராமு ; டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே
1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..!
சோமு ; ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்..? எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ
என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து
எழுந்து வருவார்..தெரியுமா..?"
###########################
"தோழி 1 ஏய் கலா.. எம்புருசன் சின்ன வீடு வச்சிருக்காரோன்னு சந்தேகமா இருக்குடி..!
தோழி 2 நான் இதை நம்ப மாட்டேன்.. நீ என்னை கடுப்பேத்தறதுக்காக சொல்லறே..!"
###########################
"HOT Re: கணவன்- மனைவி நகைச்சுவை
Post by logu on Tue Apr 30, 2013 9:47 am
கணவன் மனைவி நகைச்சுவைகள்..II
ராமு ; டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே
1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..!
சோமு ; ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்..? எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ
என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து
எழுந்து வருவார்..தெரியுமா..?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தோழி 1 ஏய் கலா.. எம்புருசன் சின்ன வீடு வச்சிருக்காரோன்னு சந்தேகமா இருக்குடி..!
தோழி 2 நான் இதை நம்ப மாட்டேன்.. நீ என்னை கடுப்பேத்தறதுக்காக சொல்லறே..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பன் 1; கனவுக்கன்னி, கை நிறைய பணம், பெரிய வீடு, பென்ஸ் காரு எல்லாம்
நான் நினைச்சது மாதிரியே என் வாழ்க்கையிலும் நடந்துச்சு..அப்புறம் தான் அந்தக்
கொடுமை நிகழ்ந்தது..
நண்பன் 2 ; ஐய்யோ.. என்னாச்சு..?
நண்பன் 1 ; எல்லாம் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சு போச்சு...!!!!"
###########################
"ராஜா ; கண்ணம்மா..இன்னிக்குதாண்டி உப்பு உறைப்போட சரியா ஒரு டிபன்
பண்ணியிருக்கே.. இதுக்கு பேர் என்ன?
கண்ணம்மா ; அய்யோ.. அது பால் கோவாங்க..!!
ராஜா ; ??????"
###########################
"மகன் ; அப்பா.. ஆப்ரிக்காவிலே வரப்போற பொண்டாட்டி எப்படி இருப்பான்னு
கணவனுக்கு தெரியாதாமே..?
அப்பா ( சோகமாக) ; அது ஆப்ரிக்காவிலே மட்டுமில்லே..எல்லா நாட்டுலேயும்
நடக்குற அநியாயம்டா மகனே..!"
###########################
"காதலி எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி நின்றாள்..
65 கி.
குதி உயர் காலணியை அகற்றினாள்..
63 கி.
துப்பட்டாவை காதலனிடம் கொடுத்தாள்....
62 கி.
அத்துடன் கையில் இருந்த சில்லறை தீர்ந்தபடியால் அடுத்து என்ன
செய்வதென்றறியாமல் நின்ற போது.. காதலன் சொன்னான்...
கவலைப்படாதே.. அன்பே.. என்கிட்ட 25 நாணயங்கள் இருக்கின்றன...!!!"
###########################
"கணவன் கிட்டே மனைவி சொன்னா.."" டார்லிங்.. கண்ணாடியை கழட்டிடுங்க..
அப்பதான் நீங்க அழகா இருக்கீங்க..""
கணவன் கண்ணாடியை கழற்றியபின் சொன்னான்.. "" நீயும்தான்..!"""
###########################
"ராணி;-வீட்ல மிக்ஸி,குக்கர்,வாஷிங் மிஷின்,ப்ரிஜ் ன்னு எது ரிப்பேர் ஆனாலும்
வேற வேற இடத்துக்கு தூக்கிட்டு போறது ரொம்ப தொல்லையா இருக்கு.
நீ எப்படி சமாளிக்கிறே..?
வாணி;-நான் எப்பவும் எங்க குடும்ப டாக்டர்கிட்டே தான் அழைச்சுக்கிட்டு போவேன்.
"
###########################
சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம். இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.
###########################
"
ஹோட்டலில் சாப்பிடுவதற்கும், வீட்டில் சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்? ஹோட்டலில் சாப்பிட்ட பின் மாவு ஆட்டுவோம். வீட்டில் மாவு ஆட்டியபின் சாப்பிடுவோம்."
###########################
"அவசரம்
அவசரமாக மெடிக்கல் ஸ்டோருக்கு ஓடி வந்த ஒரு பெண் கடைக்காரரை பார்த்து
ஆத்திரமும் அழுகையுமாக எனக்கு விஷபாட்டில் ஒன்று வேண்டும் சீக்கிரம்
கொடுங்கள். என்றாள். கடைக்காரர் எதற்கு? என்றார்.
என் கணவனை
கொல்வதற்குத் தான் என்றாள். அந்த பெண். உடேன கடைக்காரன் பதறி, ஐயோ டாக்டர்
சீட்டு இல்லாமல் விஷம் தரமாட்டேன். உடேன அப்பெண் என் கணவன் மோசமானவன், நான்
நான் இருக்கும் போதே இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறான் இந்த
போட்டோவை பாருங்கள் எனக்காட்டினாள். அதை பார்த்த கடைக்காரன் கடும் கோபமாகி
இந்த அயோகியனை உடனே கொல்லுங்கள் என விஷபாட்டிலை எடுத்து கொடுத்தான்.
கடைக்காரன்.
மனம் மாறியது எப்படி?
ஏனென்றால் போட்டாவில் அந்த பெண்ணின் கணவனுடன் உல்லாசமாக இருந்தது போட்டோகாரருடைய மனைவி."
###########################
அம்மா தாயீ, உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ என் புருஷன்தாம்பா இருக்கார் பரவாயில்லையா?
###########################
"கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க. மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்."
###########################
"கணவன்
மனைவி சண்டையில் இருவருக்கும் பேச்சு வார்த்தை நின்று போனது. அடுத்த நாள்
அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய கணவன் மனைவிடம் பேசமுடியாததால், அதிகாலை 5
மணிக்கு எழுப்பு என்றெழுதிய தாளை கொண்டு போய் மனைவியின் தலையனைக்கு
அடியில் வைத்து விட்டு தூங்கி விட்டான். மறுநாள் எழுந்தேபாது 7 மணி
ஆகியிருந்தது. கோபத்துடன் மனைவியை பார்த்தான். மனைவி அவன் தலையனையை சுட்டி
காட்டினாள். அதன் அடியில் ஒரு தளில் மனைவி எழுதியிருந்தாள். தயவு செய்து எழுந்திருங்கள் மணி 5."
###########################
"என் மனைவி காபின்னு விஷத்தைக் கொடுத்தாக் கூட நான் குடிச்சிடுவேன். அவ்வளவு நம்பிக்கையா?
அவளோட குடும்பம் நடத்துறதை விட சாகறதே மேல்"
###########################
"புதிதாக
திருமணம் ஆனவர் தன் மனைவிக்கு காது கேட்கிறதா என சோதிப்பதற்காக
வெளியிலிருந்து மனைவிடம் இன்று என்னை குழம்பு என்று கேட்டார் பதில்
வரவில்லை. வீட்டிற்குள் வந்து என்ன குழம்பு என்றார் மனைவிடமிருந்து
பதிலில்லை. சமையலறைக்கு சென்று என்ன குழம்பு என்றார். மூன்றாவது முறையும்
பதிலில்லை. அருகில் வந்தார் அதற்கு மனைவி நீங்கள் 3 முறை கூப்பிட்டதற்கு
இன்று இன்று கருவாட்டுக் குழம்பு என்று சொனனானே கேட்க வில்லையா என்றாள்."
###########################
"என் மனைவி எனக்கு கணக்கு மாதிரி. எப்படி?
அடிக்கடி உதைப்பதால்."
###########################
"ஒரு மாசத்துக்கு வீட்டு வேலை செய்ய உங்க அம்மாவை வரவைழச்சியா? உன் மனைவி எங்க?
சேலை எடுக்க ஜவுளி கடைக்கு போயிருக்கா...!"
###########################
"தனலட்சுமி விஜயனை மணந்து கொண்டதால அவள் அவனை இலட்ச ரதிபதியா ஆக்கிட்டாள். ஓ அப்படியா? தனலட்சுமி வருவதற்கு முன் விஜயன் எப்படி இருந்தான்.
கோடீஸ்வரனாக இருந்தான்...!"
###########################
எவ்வளவு வேணாலும் திருடிட்டு போங்க ஆனா போகும் போது இவரை மட்டும் அவுத்து விட்ருங்க. ஏன் வீட்டுக்காரர் வெளியூர் போயிருக்கார். இவர் பக்கத்து வீட்டுக்காருங்க.
###########################
உங்க மனைவி போட்டாவை பக்கத்துல வச்சி கிட்டு கதை எழுதுறீங்கேள என்ன கதை? பேய்க் கதைதான்...!
###########################
நான் வாழ்க்கையில் ரொம்ப அடிப்பட்டவன் சார்? இருக்கும் உங்க மனைவியை பார்த்தா கொஞ்சம் முரட்டுத்தமாத் தான் இருக்காங்க.
###########################
உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.
###########################
"என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா. ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா."
###########################
"உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு எப்படி சொல்ற ராதா
என் சர்க்கரை போடாத காபியை இப்படி புகழ்றாரே."
###########################
உங்க மனைவியை தேள் கொட்டிச்சாமே என்ன பண்ணீங்க? என்ன பன்றது? சந்தோஷத்தை கொண்டாட முடியாம தவிச்சுப் போயிட்டேன்.
###########################
சாப்பிடும்போது கூட உன் கணவருக்கு ஆபிஸ் ஞாபகமா? எப்படிச் சொல்றே? உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார்.
###########################
"எப்போதும் தமிழில் அச்சனை. எங்கே?
என் வீட்டில்."
###########################
"உன் வீட்டுக்காரரைத் திட்டுவியா? சே அதெல்லாம் நான் செய்யமாட்டேன்...
அப்பப்ப அடிக்கறதோடு சரி"
###########################
"நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே? தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா?
கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது."
###########################
என் கணவர் பயங்கர பந்தா பேர்வழி அதுக்காக வியாழன் கிரகத்துல சூப்பரான பிளாட் ஒண்ணு பேசி முடிச்சிட்டேன்னு எல்லோர் கிட்டியும் பீலாவுடறது நல்லா இல்ல.
###########################
"என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம். எப்படி?
துவைக்க ஈஸியா இருக்கிற புடவை தான் வாங்குவா."
###########################
"தினமும் என் புருஷன் குடிச்சிட்டு வர்றாரு ஏன் விட்டு வைக்றே. கேட்க வேண்டியதானே?
சீ... குடிக்கிற பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது."
###########################
"உங்க வாழ்க்கையிலேயே உங்களுக்கு ரொம்ப பிடித்தமானவரைப் பற்றி கூறுங்க? அது நிச்சயம் என் மனைவிதான் சார்
அடப் பயப்படாதீங்க சார் உண்மையைச் சொல்லுங்க."
###########################
உன் சமையல் எப்பவும் டாப்டக்கறா தான் இருக்குது மீனா நீங்க என்னதான் ஐஸ் வச்சாலும் தினமும் நீங்க தான் சமையல் பண்ணியாகனும்.
###########################
மனைவி - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க? கணவன் - இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
###########################
என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம் பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.
###########################
"என்னங்க தலையிலே காயம்? விறகு இடிச்சிட்டது
பார்த்து போககூடாது. ஆமா விறகு எங்க இருந்துச்சி?
என் பொண்டாட்டி கையில"
###########################
"சென்சார் போர்டு அதிகாரியை கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு ஏன்?
பெட்ரூமை பார்த்தாலே வெறுப்பாயிடுறார்."
###########################
ராதா, கட்டின புடவையோட வா, உன்னை காப்பாத்துகிறேன்? அப்ப ஜாக்கெட் போடாம வரச் சொல்றீங்களா
###########################
அவர் ஏன் அந்த பொண்ணை அப்படி முறைச்சி பார்க்கிறார்? அவர் தான் முறை மாப்பிள்ளையாம்.
###########################
"நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...! சந்தியமா உண்மைங்க...!
அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பு வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்."
###########################
கருவை கலைக்கனும்னு சொல்றியே, உன் வீட்டுக்காரர் அனுமதியை கேட்டியா? எப்படி கேட்குறது? அவர் வெளிநாட்டுக்கு போய் இரண்டு வருஷமாச்சே
###########################
என்னங்க மாப்பிள்ளை, உடம்புபூரா ஒரே தழும்பா இருக்கு? நான் அப்பவே சொல்லல.. மாப்பிள்ளை வாழ்க்கையில் ரொம்பவும் அடிபட்டவர்னு.
###########################
"ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா? ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி."
###########################
"
என் மனைவிக்கு என் மேல் பிரியம் ஜாஸ்தி எப்படி?
என்னை அடிக்கும் போது கூட, ரத்தம் வராமத்தான் அடிப்பா."
###########################
உன் புருஷன் எப்போது சாப்பிட்டாலும் சாப்பாட்டை புகழ்ந்து கொண்டே சாப்பிடுகிறாரே ஏன்? அது அவரே சமைத்தது அல்லவா
###########################
"காலையில என் வீட்டு வாசல்ல நான் தண்ணீ தெளிச்சாபோதும், என் வீட்டுக்காரர் எழுந்துக்குவார் எப்படி?
குடிச்சிட்டு அங்கதானே விழுந்துகிடப்பார்."
###########################
ஏன் உங்க பேரை கரப்பான் பூச்சி குமார்னு வச்சிட்டீங்க? என் மனைவி என்னை கண்டு பயப்படனும் தான்.
###########################
என்னது உங்க வீட்டுக்காரர், வீட்டுக்கு நடுவில் வெடுகுண்டை வெச்சிட்டு என்னமோ எழுதிகிட்டிருக்கார்? கேட்டேன், வெடிகுண்டை மையமா வெச்சி நாவல் எழுதிகிட்டிருக்காராம்.
###########################
என்னது வீட்டுல செயின் கமிஷன் விசாரணையா? ஆமா என் மனைவிக்கு செயின் வாங்கிக் கொடுத்த விஷயத்தை எங் கம்மா விசாரணை பன்றாங்க.
###########################
"ரவி மனைவி சுகுனா பக்கத்து வீட்டுக்காரியுடன் பேசிக் கொண்டி ருந்தாள். சுகுனா, உன்புருஷன் எப்போதும் பார்த்தாலும் இரவு நேரத்தில் நேரம் கழித்து வருகிற பழக்கம் உள்ள வராச்சே. எப்படி அவரை திருத்தினாய்?
அதற்கு சுகுனா ஒரு நாள் வந்து அவர் கதவை தட்டும் போது யாராது ரமேஷா? நீயாகத்தானிருக்கும். நீ தான் இந்த நேரத்திற்கு வருவோ."
###########################
உன் புருஷன் செத்ததுக்கு நீ அழவே இல்லையே ஏன்? நிறைய டி.வி. சீரியல்ல பார்த்து அழுதட்டதால் கண்ணீர் நின்னு போச்சு.
###########################
ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குறிக்கிறே? யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...!
###########################
என்ன நமக்கு பிறந்த ரெட்டை குழந்தைகள்ள ஒன்னு கருப்பாகவும், ஒன்னு சிவப்பாகவும் இருக்கு? அதுவா ஒன்னு ஒரிஜினல், அதை கார்பன் காப்பி எடுக்கும் போது இன்னொன்னு கருப்பாயிடுச்சு.
###########################
என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம். பரவாயில்லை!! என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.
###########################
என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அரு ள் புரியணம் அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே.
###########################
"என்னங்க என் பல் ரொம்ப வலிக்குது அப்படி என்ன வலுவா கடிச்ச அமலா?
உங்க அம்மாவைத்தான்"
###########################
திருமணமானவர்களையே ஏன் சேல்ஸ் மேனாக வைத்திருக்கிறீர்க ள்? அவர்கள் தான் மகிழ்ச்சியுடன் வெளியூர் செல்கிறார்கள்!
###########################
"என் மனைவி தன் கையாலேயே எனக்கு பரிமாறுவாள்! கொடுத்துவைத்தவன் நீ
ம்ஹும் சமையல் மட்டும் என்னை செய்ய சொல்கிறாளே!"
###########################
ஓட்டப் பந்தயத்துலு எப்படி சார் முதலில் வந்து தங்க பதக்கம் வாங்கினீங்க? அதன் ரகசியம் சொல்லுங்க, இதற்கு யார் காரணம்? என் மனைவிதான் தினமும் என்னை துரத்தி துரத்தி அடிக்க வருவா ஓடி ஓடி பழக்கப்பட்டு முதல் பரிசு வாங்கிட்டேன்.
###########################
"என் கணவருக்கு சர்க்கரை வியாதி இருக்குமோன்னு பயமா இருக்கு ஏன்?
அவரை சுத்தி எப்பவும் எறும்பு மொய்க்குது."
###########################
"உன் வீட்டுக்காரர் கோலமெல்லாம் போடுறாராமே? யார் சொன்னா?
என் வீட்டுக்காரர் காலையில் கோலம் போடும் போது பார்த்தாராம்...!"
###########################
உப்பு, உரப்பு இல்லாத சுரணை இல்லாம இனிமேல் சாப்பிடனும். கல்யாணமானதிலிருந்து அப்படித்தான் சாப்பிடுறேன் டாக்டர்.
###########################
எங்க தெருவுல பிச்சைக்காரங்களே இல்லாததுக்கு காரணம் என் மனைவிதான்...! ம்ஹூம் அவ சமைச்ச சாப்பாட்ட போட்டே அனுப்பிச்சிட்டாங்க.
###########################
"பொண்டாட்டிக்கு பயப்படுவதில்லைன்னு முடிவுக்கு வந்திட்டேன். சபாஷ் எப்பேலர்ந்து...?
அவ செத்துப் போனதிலேர்ந்து"
###########################
"தெரியாத்தனமா இவரை கல்யாணம் பண்ணிட்டேன். ஏண்டி சலிச்சுக்குறே?
முதலிரவு ரூமுக்குள்ளே நுழைஞ்சதும்.
எல்லோரும் இன்னிக்கு உங்களுக்கு முதலிரவுன்னு சொல்லாங்க நீ இதுவரைக்கும் இரவையே பார்த்ததில்லையான்னு கேட்கிறார்."
###########################
"மாமனாரிடம் டூ வீலர் கேட்டது தப்பா போச்சு? ஏன் என்னாச்சி?
மாட்டு வண்டி வாங்கிகொடுத்துட்டார்"
###########################
"ஏண்டி வீட்டுக்காரர் பயங்கர கஞ்சத்தனம்... எப்படி...?
தலைக்கு டை அடிச்சா 50 ரூபா செலவு ஆகுதுன்னு ஒரே செலவா கறுப்பு விக் வாக்கி மாட்டிக்கிட்டார்"
Post a Comment
Post a Comment