மிஸ்டர் எக்ஸ் இருவருக்கும் வழியில் 2 குண்டுகள் கிடைத்தன.

மிஸ்டர் எக்ஸ் 1 - ஏய் வா, போலீஸ் கிட்ட போய் குடுத்துட்டு வருவோம்.

மிஸ்டர் எக்ஸ் 2 - வழியில ஏதாவது ஒண்ணு வெடிச்சிடுச்சுன்னா?

மிஸ்டர் எக்ஸ் 1 - போலீஸ் கிட்ட பொய் சொல்லிடுவோம் ஒண்ணுதான் கிடைச்சதுன்னு."





###########################




"(ஜெயிலில்) உன்னை நாளைக்கு காலைல 5 மணிக்கு தூக்குல போடப்போறோம்.

ஹா ஹா ஹா

எதுக்கு சிரிக்கற?

நான் எழுந்துக்கறதே 9 மணிக்குத்தானே?"





###########################




"ஒரு ஆள்: ரொம்ப வெய்யில் தாங்க முடியலேன்னா என்ன செய்வீங்க?

போய் AC முன்னாடி உக்காருவேன்.

அப்பயும் முடியலேன்னா?

AC ஐ on பண்ணுவேன்."





###########################




"மிஸ்டர் எக்ஸ் 1 : எதுக்கு ஓட்டைக் குடையை எடுத்துட்டு வந்திருக்கீங்க?

மிஸ்டர் எக்ஸ் 2 : இல்லேன்னா மழை நின்னுடுச்சுன்னா எப்படித் தெரியும்?"





###########################




ஒருதடவை மிஸ்டர் எக்ஸ் இந்திய தேசியக்கொடி வாங்க கடைக்குப் போனார். அவர் கேட்ட கேள்விக்கு கடைக்காரர் மயக்கம் போட்டு விழாத குறைதான். அவர் கேட்டது 'இதுல வேற எதுனா கலர் இருந்தா காமிங்க'.





###########################




"இன்னிக்கு தண்ணீரை நான் ஏமாத்திட்டேன்.

எப்படி?

குளிக்கறதுக்காக சூடு பண்ணிட்டு பச்சைத் தண்ணில குளிச்சுட்டேன்."





###########################




"மனைவியிடம்: உனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா நான் பைத்தியம் ஆயிடுவேன்.

இன்னொரு கல்யாணம் கட்ட மாட்டீங்களா?

பைத்தியத்துக்கு என்ன, எது வேணும்னாலும் செய்யும்."





###########################




" எதுக்கு மிஸ்டர் எக்ஸ் butter ஐ ஜன்னல் வழியா தூக்கிப்போடறாரு?

butterfly பாக்கத்தான்."





###########################




"கண்டக்டர்: ""விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?''

டிரைவர்: ""இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!''"





###########################




"""மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி...""

""அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?""

 ""அது.... குருவி!"""





###########################




"ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?

நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்"





###########################




"பிச்சைக்காரர்: ""அம்மா தாயே... பிச்சை போடுங்க,

நான் வாய் பேச முடியாத ஊமை.""

வீட்டுக்காரம்மா: "" பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...

எனக்கு காது கேட்காது."""





###########################




"(கல்யாண மண்டபம்)

""வாங்க.. வாங்க..! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? பொண்ணு வீட்டுக்காரரா..?""

""ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!"""





###########################




ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.





###########################




"காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.

காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?

காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி"





###########################




ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம், அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம் , அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?





###########################




"ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?

ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.

வேற எதாவது பெரிசா சொல்லு.

ஒரு MRF டயர் வாங்கிக்கொடு."